ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரி விலக்கு பெறுவதற்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் நகரில் பணிபுரியக்கூடிய பல்வேறு ஐடி ஊழியர்களும் தங்களுடைய வருமான வரி கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததாக கூறி வரி விலக்கு பெற்றுள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இது ஒரு மோசடி என்பது கண்டறியப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GCCஇன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளை குறிப்பிட்டு வருமான வரி விலக்கு பெற முடியும்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி தொழில் நிபுணர்கள் பலரும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக மோசடி செய்து 110 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி 36 நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஐடி ஊழியர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடையே வழங்காமல் போலியாக கணக்கு காட்டி உள்ளனர்.
ஒரு ஐடி ஊழியரின் ஆண்டு ஊதியமே 46 லட்சம் ரூபாய் தான், ஆனால் அவர் ஒரு அரசியல் கட்சிக்கு 45 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதாக போலியாக கணக்கு காட்டி உள்ளார்.
ஐடி ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கு காசோலை மற்றும் வங்கி பணப்பரிமாற்ற வழிமுறைகளில் பணத்தை அனுப்புகின்றனர். பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகளுக்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டு வருமான வரியில் கணக்கு காட்டி வரிவிலக்கு பெறுகின்றனர். வரி விலக்கு பெற்ற பிறகு அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை இந்த ஊழியர்களுக்கு திரும்ப வழங்கி விடுகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு ஐடி ஊழியர்கள் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இதற்கு முன்பு வீட்டு வாடகை மற்றும் கல்விக் கடன் ,வீட்டு கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றில் மோசடியாக கணக்கு காட்டி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த மோசடியை தொடர்ந்து தற்போது தனியார் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதுபோல வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு போலியாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் குஜராத் , தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நன்கொடைகளை பெற்ற கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம் மீண்டும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதிலும் மோசடி செய்தால் அவர்களுக்கு 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
ஒரு ஐடி நிறுவனத்தில் 430 ஊழியர்கள் இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக 17.8 கோடி ரூபாயை வரி ஏய்ப்பு செய்துள்ளனர். ஒவ்வொரு ஊழியரும் 4 லட்சம் ரூபாயை அரசியல் கட்சிக்கு வழங்கியதாக கணக்கு காட்டி இருந்தனர். இவ்வாறு அனைத்து ஐடி நிறுவனங்களிலும் ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என குறிப்பிடப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர் அப்போது தான் இந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications