ஐடி துறை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 30% வரை சம்பளம் அதிகரிக்கலாம்.. எந்த நாட்டில் ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் சம்பள விகிதமானது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது எனலாம்.

Straits Times-ன் கூற்றுப்படி சிங்கப்பூரில் தொழில் நுட்பத் துறையின் சம்பளம் அடுத்த 2 ஆண்டுகளில் அதிகரிக்கும். குறிப்பாக நிதித்துறையில் பணியமர்த்தல் ஏற்றத்தின் மத்தியில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பள விகிதமானது அடுத்த ஓரிரு ஆண்டில் 15 - 30% வரையில் ஏற்றத்தினை காண்கின்றது.

விருப்பம் இருந்தா வாங்க, இல்லாட்டி வீட்டிலேயே இருங்க.. ஐடி நிறுவனங்கள் முடிவால் ஊழியர்கள் குஷி..! விருப்பம் இருந்தா வாங்க, இல்லாட்டி வீட்டிலேயே இருங்க.. ஐடி நிறுவனங்கள் முடிவால் ஊழியர்கள் குஷி..!

திறமைக்கான தேவை அதிகரிப்பு

திறமைக்கான தேவை அதிகரிப்பு

நிறுவனங்கள் தொடர்ந்து டிஜிட்டல் மாற்றத்தினை செய்து வரும் நிலையில், பணியமர்த்தல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிங்கப்பூரில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் சீன தொழில் நுட்ப நிறுவனங்களும் விரிவாக்கம் செய்து வருகின்றன. ஆக இங்கு திறமைக்கான தேவையானது மிக அதிகமாக உள்ளது.

இவர்களுக்கு அதிகம்

இவர்களுக்கு அதிகம்

இதற்கிடையில் டேட்டா அனலிஸ்ட், டேட்டா இன்ஜினியர்ஸ், பேக் எண்ட் டெவலப்பர்ஸ், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்களுக்கு, 25 - 30% வரையில் சம்பளம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் 3 வாய்ப்புகள் வரை

ஒவ்வொருவருக்கும் 3 வாய்ப்புகள் வரை

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சிங்கப்பூர் மற்றும் பிற முக்கிய பொருளாதார நாடுகளை சேர்ந்த தொழில் நுட்ப ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும், 2 அல்லது 3 வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் நிறுவனங்களும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன, சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற பல விஷயங்களும் சேவை துறைக்கு மீண்டும் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இது தேவையை அதிகரிக்கிறது. கொரோனாவின் மத்தியில் கடந்த சில ஆண்டுகளில் உணவு சேவை, சில்லறை விற்பனை, ஹோட்டல்கள் என பல சேவைகளிலும் டிஜிட்டல் மாற்றம் உட்புகுந்துள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் ஆண்டில் தேவை அதிகரிக்கலாம்.

சிங்கப்பூர் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT professional getting 3 job offers in this country: Salary can increase up to 30%

Salary rates in the IT sector in Singapore are expected to rise by 15-30% over the next couple of years.
Story first published: Wednesday, June 1, 2022, 17:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X