உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மந்த நிலை காரணமாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களுக்கான ஊதியச் சலுகைகள் 30 முதல் 40% வரை குறைந்துள்ளதாக தொழில்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருந்த ஊதியச் சலுகைகள் தற்போது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடரும் பணி நீக்கம்: தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் மைக்ரோசாப்ட் , கூகுள், அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரிய அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.

சமீபத்திய நாஸ்டாக் அறிக்கையின்படி 2023 - 24 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை 3.8% வளர்ச்சி அடையும் என கூறியுள்ளது. ஆனால் இது முந்தைய ஆண்டில் 8.1 % ஆக இருந்தது. எனவே இந்த மந்த நிலை காரணமாக ஊதியச் சலுகைகள் குறைந்துள்ளன.
ஊதியங்களை குறைக்கும் நிறுவனங்கள்: சில மாதங்களுக்கு முன்னரே இந்த போக்கு தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் ஊதியம் வாங்கும் மூத்த தொழில்நுட்ப வல்லுனர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே ஆட்களை பணி அமர்த்த ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் CXOக்கள் மற்றும் மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள், அவர்கள் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என நிர்வாகிகள் தேடல் மற்றும் திறமை ஆலோசனை நிறுவனமான ஏபிசி கன்சல்டன்சியின் மூத்த அதிகாரி ரத்னா குப்தா கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி பெரும்பாலான நிறுவனங்களில் 30% வரை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப்களில் நல்ல வாய்ப்பு: ஆனால் நல்ல தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருக்கிறது, நாங்கள் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பலருக்கு வேலை வாங்கி தந்திருக்கிறோம் என ஐவி கேப் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விக்ரம் குப்தா கூறியுள்ளார்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்கள் தேர்வில் மிக கவனமாக இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஊதியம் சார்ந்த முடிவுகளை கவனமாக எடுக்க தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கார்ன் ஃபெர்ரி இந்தியாவின் இயக்குநர் நவ்னீத் சிங், மூத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பெரும்பாலும் ஸ்டார்ட் அப்களில் பணி அமர்த்தப்படுகின்றனர் என்றும், ஸ்டார்ட் அப்களில் முந்தைய ஊதியத்தை விட 30% குறைந்த ஊதியத்தில் பணியாற்ற கூட முன் வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?



Click it and Unblock the Notifications