கேரளாவை தலைமையிடமாக கொண்டு "Savoury sea shell" என்ற பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரபு நாடுகளிலும் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா. அரேபியன் உணவுகளுக்கு பெயர் போன Savoury sea shell உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, கேரளா ஐடி அதிகாரிகள் உணவக நிறுவனத்தின் தலைமையிடம் மற்றும் கிளைகள் என அனைத்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில், சென்னை ஐடி அதிகாரிகள் சென்னையில் செயல்பட்டு வரும் 'சீ ஷெல்' உணவக கிளைகளில் சோதனை நடத்தினர். அண்ணா நகர், பெருங்குடி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த உணவகத்தின் ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அதை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், இந்த உணவகம் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ள்ளனர். இந்த உணவகத்தின் ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்த நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சோதனைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆர்யாவின் சினிமா வாழ்க்கை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், ராஜா ராணி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் சென்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சயீஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. திருமணத்திற்கு பின் அதிக பொறுப்புடன் இருந்து வரும் ஆர்யா, நடிப்பு மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதிக வருமானம் சம்பாதிக்கும் ஆர்யா : தி ஷோ பீப்புள் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் ஆர்யா, அந்நிறுவனம் மூலம் அமரகாவியம், ஜீவா, கேப்டன், டிடி நெக்ஸ்ட் லெவல் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் 2 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 2 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், 2015ஆம் ஆண்டில் Forbes India Celebrity 100 பட்டியலில் இடம் பெற்றார். மேலும், அதிக வருமானம் சம்பாதிக்கும் இந்திய பிரபலங்களில் இவரும் ஒருவர்.
ஆர்யாவின் சம்பளம் : நடிகர் ஆர்யா பெரியளவில் ஹிட் படங்கள் கொடுக்காததால், அவர் குறைந்த சம்பளமே வாங்கி வருகிறார். அவருக்கு தற்போது ஒரு படத்துக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பின் சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தற்போது ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் ஆர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் பெரியளவில் இல்லாததால் அவரது சம்பளமும் இன்னும் குறைவாகவே உள்ளது.
ஆர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு..?: சினிமா மற்றும் தொழிலில் கலக்கி வரும் ஆர்யா பல கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். இவரது மாத வருமானம் மட்டுமே ரூ.2 கோடி என கூறப்படுகிறது. மேலும், இவரது சொத்து மதிப்பு ரூ.90 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications