தொடர்ந்து சில காலமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நடைபெற்றது. இது குறித்த விவரங்களை அடிக்கடி செய்திகளில் பார்த்தோம். ஆனால் 2025-ஆம் ஆண்டில் மீண்டும் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று டேலண்ட் சொல்யூஷன்ஸ் NLB சர்விசஸ் நிறுவனம் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து IT துறை மீண்டும் தனது செயல்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக 2025-ஆம் ஆண்டில் பல்வேறு ரோல்களில் அதிகரித்த வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று NLB சர்விசஸ் தெரிவித்திருக்கிறது.
வரவிருக்கும் ஆண்டில் ஐடி துறையில் புதிய பணியமர்த்தல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும். இதனால் பல்வேறு ரோல்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் டெக்னாலஜி போன்ற பல்வேறு ரோல்களுக்கான தேவையும் 30 முதல் 35 சதவீதம் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நல்ல திறமைகளுடன் கூடிய பணியாளர்களை பணியமர்த்துவதில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. NLB சர்விசஸ்-இன் பகுப்பாய்வு மேக்ரோ சுற்றுச்சூழல், தொழில் போக்குகள் மற்றும் தேவை ஆகியவற்றைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் 2024 முதல் 2025-ஆம் ஆண்டின் 2-ஆம் பாதியில் கேம்பஸ் இன்டர்வியூகள் மூலம் பணியமர்த்தும் செயல்முறை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
2021 முதல் 2022-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக வாடிக்கையாளர்களின் தேவை குறைந்து பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க செயல்முறையில் ஈடுபட்டன. இது பெருவரியான பணியாளர்களைப் பாதித்தது. ஆனால் இந்த 2025-ஆம் ஆண்டில் புதிய பணியமர்த்தல் காரணமாக இந்த நிலை சரி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு புதிதாக படித்து வெளியில் வரும் பிரஷர்களுக்கு இந்த அறிக்கை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், டேட்டா அனாலிடிக்ஸ், கிளவுட் டெக்னாலஜிஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய ரோல்களில் பணியாற்ற அதிக நபர்கள் தேவைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல உலகளாவிய ஜிசிசி நிறுவனங்கள், BFSI நிறுவனங்கள், ஹெல்த் கேர், சில்லறை விற்பனை துறைகள் போன்றவையும் 2025-ஆம் ஆண்டில் 30 முதல் 35 சதவீதம் வரை தங்கள் பணியாளர்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் மந்தமாக இருந்த பணியமர்த்தல் செயல்முறை இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்ற செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications