உலகில் உள்ள பல துறைகளில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், ஐடி துறையில் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.
சொல்லப்போனால் ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டில் 2 முதல் 7 சதவீதம் வரை இழப்பினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் ஐடி துறையின் வளர்ச்சியானது 8.1 சதவீத வளர்ச்சியுடன் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்த வளர்ச்சி காணுமா என்ற சந்தேக நிலையே காணப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம்
இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸினால் எதிர்பார்க்கும் அளவு மோசமான தாக்கம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சந்தையில் சற்று திருத்தம் தொடங்குவதற்கு முன்பு டிசிஎஸ் பங்கின் விலையானது 2,200 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.
எதிர்பார்க்கும் அளவு பாதிக்காது
ஆனால் அதே மட்டத்தில் தற்போது இந்த பங்கின் விலையானது தற்போது உள்ளது. நிபுணர்கள் கூறிய படி கொரோனாவின் தாக்கமானது ஐடி துறையின் செயல்பாடுகளை பாதித்துள்ளது தான். இது ஜூன் காலாண்டில் அதன் எதிரொலி தெரியும். எனினும் கொரோனா வைரஸினால் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இருக்காது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
வருவாய் குறையும்
இந்த நிலையில் இந்த வாரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கைகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. டிசிஎஸ்ஸின் வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 5 சதவீதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிபுணர்கள் எதிர்பார்க்கும் அளவு பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
சரிவினைக் காணும்
முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை சற்று நிலை நிறுத்துவது நல்லது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் அதன் வருவாய் சரிவினைக் காணலாம் என்று கூறியது. மேலும் இரண்டு காலாண்டுகளுக்கு டாலர் வருவாயில் நடுத்தர ஒற்றை இலக்க தொடர்ச்சியான சரிவினைக் காணும் என்றும் அறிவித்தது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தான் டிசிஎஸ்ஸின் காலாண்டு அறிக்கை வெளியாக உள்ளது.
டிசிஎஸ் பங்கு விலை
இந்த நிலையில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கு விலையானது, பிஎஸ்இ குறியீட்டில் இன்று தற்போது 66.70 ரூபாய் அதிகரித்து 2265.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 3 சதவீத ஏற்றமாகும். இதே என்எஸ்இ குறியீட்டிலும் 2.97 சதவீதம் இந்த பங்கின் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications