தரைதட்டும் இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்.. இனி என்னவெல்லாம் நடக்கபோகுதோ..!!

வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் வணிகம் தொடங்கியவுடன் சரிவை சந்தித்தாலும், ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்தில் சரிவில் இருந்து மீண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி50 ஆகிய இரண்டு குறியீடுகளும் சரிவை பதிவு செய்து தற்போது மீண்டுள்ளது மூலம் முதலீட்டாளர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

சென்செக்ஸ் குறியீடு 10.30 மணியளவில் 115.11 புள்ளிகள் உயர்ந்து 74,455.79 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 42.95 சதவீதம் உயர்ந்த 22,587.65 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக பதிவான உயர்வு சில நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தரைதட்டும் இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்.. இனி என்னவெல்லாம் நடக்கபோகுதோ..!!

உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மை பங்குச்சந்தையை கடுமையாக பாதித்து வருகிறது. இதேபோல் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது முக்கிய வர்த்தக கூட்டாளிகள் நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு இணையாக வரியை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தை கடுமையாக பாதிப்பது மட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். இதனால் கடந்த சில மாதங்களாகவே பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே எச்சரிக்கையான மனநிலை உள்ளது.

குறிப்பாக, இன்றைய வர்த்தக சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து வருவது ஐடி துறை நிறுவனங்களின் பங்கு சரிவு தான், அமெரிக்கா ரெசிப்ரோக்கல் வரியை விதித்தால் ஐடி துறையை பாதிக்குமா என்ற பீதி எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

இதில் அதிகப்படியாக இன்போசிஸ் 1.49 சதவீதம் சரிந்துள்ளது, இதோடு ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் குறைவான சரிவில் உள்ளது.

உலகளாவிய வர்த்தக சூழலில் நிலவும் குழப்பங்கள் இந்திய சந்தையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, முதலீட்டாளர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக வரிகளை தொடர்ந்து விதிப்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான பயத்தை உருவாக்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+