நாட்டில் திறமை மற்றும் ஐடி சேவைகளுக்கான தேவை தொடர்ந்து வளர்ந்து வருவதால், தகவல் தொழில் நுட்ப துறையானது இந்தியாவின் வேலை சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
நாட்டில் முக்கிய இடத்தினை பிடித்துள்ள ஐடி துறையானது, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவால் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஏனெனில் உலகம் முழுவதும் பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதாரத்தினால், ஐடி துறையின் தேவையானது குறையலாம் என்றும் கருதப்பட்டது.
ஐடி ஊழியர்களுக்கு தேவை அதிகம்
ஆனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், இந்தியாவில் ஐடி துறையில் திறன் வாய்ந்த ஐடி ஊழியர்களுக்கு தேவை கூடிக் கொண்டே போகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வரும் காலத்தில் ஐடி துறையானது வேலை வாய்ப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்க கூடும் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபி நாதன் தெரிவித்துள்ளார்.
திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்
அதாவது இந்தியா வேலை வாய்ப்பு சந்தையில் ஐடி துறை சம்பந்தமான வேலை வாய்ப்புகள் பெருகும் என்று கூட இதனை எடுத்துக் கொள்ளலாம். அதோடு வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் அவசியத்தினையும் அவர் எடுத்துரைத்துள்ளார். மேலும் இளைஞர்கள் அதற்கேற்றவாறு தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐடி துறை முக்கிய பங்கு வகிக்கும்
ஆக இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையானது தொடர்ந்து மிகவும் வலுவாக இருக்கும். அதோடு தொடர்ச்சியாக இந்த துறையானது வளர்ச்சி கண்டு கொண்டே இருக்கும். இது, வளர்ச்சி எந்த விகிதத்தில் இருக்கும் என்பதை பொருத்து இருக்கும். மேலும் எதிர்வரும் காலங்களில் ஐடி துறையானது மிக கவர்ச்சிகரமானதாக இருக்கும். இந்தியாவின் வேலைச் சூழலில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இருக்கும்.
ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்தும் துறை
ஐடி துறையில் தற்போது பணி நீக்கம் பற்றிய கவலைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தி வரும் துறை இதுவாகும். சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் நேரத்தில், இந்த தொற்று நோய் ஐடி துறையின் தேவையினை பாதிக்கலாம், இதன் காரணமாக நிறுவனங்கள் பணி நீக்கங்களை மேற்கொள்ளலாம் என்ற கவலைகள் இருந்து வருகின்றன.
தேவைக்கு ஏற்ப திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் ஐடி துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவராக இருந்தாலும், உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உங்களை நிலை நிறுத்தும். மேலும் தற்போது கொரோனா உங்களை மேலும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்த தள்ளப்பட்டுள்ளது. ஆக வரும் காலத்தில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கும், ஐடி துறையின் வளர்ச்சியும் கணிசமான வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.


Click it and Unblock the Notifications