ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. காரணம் இந்த கொரோனா தான்..!

மும்பை: இந்தியாவில் 185 பில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல் தொழிலநுட்ப துறையில், சீனாவின் கொரோனா வைரஸால் சிறிது தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐடி துறை வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் உற்பத்தியாளர்களாக இருப்பதால், கொரோனாவால் விரைவில் பிரச்சனையை சந்திக்கக் கூடும் என்று இத்துறையை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் அடுத்த 2 - 3 வாரங்கள் முக்கியமானவை என்று குளோபல் செக்யூரிட்டி பிராக்டிஸ் இணைத் தலைவர் அகிலேஷ் துட்டேஜா கூறியுள்ளார். மேலும் இந்த காலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்தால் உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை பெருமூச்சு விடும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

அதிலும் சீனாவில் இன்று வரை கொரோனாவுக்கு 2,236 பேர் பலியாகியுள்ளதாகவும், இதே 75,000 பேருக்கும் அதிகமானவர்களைத் இந்த தொற்று நோய் தொற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனா இந்த தொற்றுதலை கட்டுப்படுத்த மிகவும் போராடி வரும் நிலையில், சீனாவின் போக்குவரத்தை கூட தடை செய்துள்ளது. குறிப்பாக பல இடங்களுக்கு விமான போக்குவரத்தையே தடை செய்துள்ளது.

வணிகம் பாதிப்பு

வணிகம் பாதிப்பு

இது சீனாவின் பெரும்பாலான வணிகத்தையே பாதித்துள்ளது. குறிப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களையே தடை செய்துள்ளது. இதனால் சீனாவின் பெரும்பாலான தொழில் சாலைகள் ஐடி துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் சீனாவின் நிதிக் கட்டுப்பாட்டாளர்கள் சீனாவின் பொருளாதாரத்தை கட்டுபடுத்த, வட்டி விகிதங்களைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை கடன்களை நீட்டிக்கவும் வங்கிகளை வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவிலுள்ள இந்திய ஐடி நிறுவனங்கள்

சீனாவிலுள்ள இந்திய ஐடி நிறுவனங்கள்

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின், தொற்று நோயின் மையமான சீனாவில் மிகப்பெரிய அளவில் உள்ளன. அதிலும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சீனாவின் பிரதான அவுட்சோர்சிங் நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது. இதே போல் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இன்போசிஸ் தனது வெளிநாட்டு மையத்தை குய்ஷோ மாகாணத்தில் 2015ல் திறந்தது. விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் ஆகியவையும் சீனாவிலும் உள்ளன.

வீட்டில் இருந்தே பணி புரியலாம்

வீட்டில் இருந்தே பணி புரியலாம்

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வந்தததையடுத்து சீனாவில் பல நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திய நிலையிலும், இந்திய தொழில்நுட்ப துறை நிர்வாகிகள், இதுவரை சீனா ஊழியர்கள் இதுவரை ஊழியர்களை வீட்டில் இருந்தோ அல்லது தொலைதூரத்தில் உள்ள பிற இடங்களில் இருந்தும் வேலை செய்யச் சொல்வதன் மூலம் அதன் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை.

உலகப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி

உலகப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி

கொரோனாவின் கொடிய தாக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டதட்ட 0.3% குறைக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து இந்தியாவின் காப்ஜெமினியின் தலைமை இயக்க அதிகாரி அன்டோயின் இம்பெர்ட் கூறுகையில், உலகளாவிய செயல்பாடுகளில் நாங்கள் பெரிய தாக்கத்தை காணவில்லை.

வருவாயில் சீனாவின் பங்கு

வருவாயில் சீனாவின் பங்கு

எனினும் அதிகளவிலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டுமா என்று ஆராய்ந்து வருகிறோம். எங்களுக்கு பிளெக்ஸி வேலைகள் உள்ளது. அவை நமக்கு அது தேவைப்பட்டால் அதில் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார். எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இம்பெர்ட் கூறியுள்ளார். எங்களது ஒட்டுமொத்த வருவாயில் ஆசிய பசிபிக் பிராந்தியம் 5-7% பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஐடி துறை சற்று அடி வாங்கலாம்

ஐடி துறை சற்று அடி வாங்கலாம்

சீனாவின் சந்திர புத்தாண்டு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது சேவையினை முடக்கியிருந்தன. ஆனால் இதன் பின்னர் கொரோனாவால் தற்போது முடக்கியுள்ளன. ஆக இதுவரையில் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட தாக்கம் இதுவரை மிகக் குறைவு தான். ஆனால் நாஸ்காமின் உலகளாவிய வர்த்தக மேம்பாட்டு மூத்த இயக்குனர் ககக் சபர்வாலின் கூற்றுப்படி, ஒட்டுமொத்த பொருளாதார தாக்கம் சீனாவிற்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
எப்படி எனினும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் தொடரும் பட்சத்தில் தகவல் தொழில் நுட்ப துறை சற்று அடி வாங்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+