கொரோனா பாதிப்பு பலருக்குப் பல புதிய பாடங்களைக் கற்பித்துள்ளது, குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் செலவுகளைக் குறைக்கப் பல வழிகள் இந்த லாக்டவுன் காலத்தில் கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா எதிரொலியாக ஐடி நிறுவனங்கள், தங்களது வர்த்தகம் மற்றும் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த முயற்சியில் பெரிய அளவிலான வெற்றியை நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கண்டுள்ளது.
இந்நிலையில் ஐடி நிறுவனங்கள் தற்போது ஐடி சேவை மற்றும் வர்த்தகம் மீதான வரி விதிப்புச் சட்டங்கள், தொழிலாளர் சட்டதிட்டங்களில் மாற்றம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐடி துறை
191 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் மே மாத துவக்கத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, கொரோனா பாதிப்பு முடிந்து இந்திய வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் இந்திய ஐடி துறையில் பணியாற்றும் 43 லட்சம் ஊழியர்களில் குறைந்தபட்சம் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உள்ளனர். இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தச் சட்டதிட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
நாஸ்காம்
இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்களின் பொது அமைப்பான நாஸ்காம், இதுகுறித்து விளக்கமான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் இவ்வறிக்கையைத் தொலைத்தொடர்பு மற்றும் ஊழியர்கள் அமைச்சகத்திற்கு அனுப்பித் தேவையான சட்ட விதிமுறைகளை மாற்ற அனுமதி கோர உள்ளது நாஸ்காம்.
பரவின் ராவ்
இந்திய ஐடி துறையில் அதிகளவிலான ஊழியர்களுக்கு நிரந்தரமாக (நீண்ட காலம்) Work From Home கொடுக்கப்படும் போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் Work From Home முறைக்குத் தற்போது தொழிலாளர் விதிகளில் இடமில்லை. எனவே அதை மாற்றியமைக்கவும் எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விதிகளை மாற்றம் செய்ய வேண்டும் என இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியும், நாஸ்காம் தலைவருமான யுபி. பிரிவின் ராவ் தெரிவித்துள்ளார்.
8 மணிநேரம்
இந்தியாவில் மட்டும் Work From Home பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்கள் ஒரு நாளில் 8 மணிநேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும், இதை எப்படிக் கண்காணிப்பது எப்படி என்பது தான் தற்போதைய பிரச்சனை.
இதுகுறித்த முடிவை விரைவில் தொழிலாளர் அமைச்சகம் எடுக்கும் என எதிர்பார்க்கிறது.
பெண்கள்
Work From Home பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிகளவிலான பெண்கள் நன்மை அடைவார்கள், குழந்தை மற்றும் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வேலையை விட்ட பெண்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். இதனால் 50:50 ஆண் பெண் விகிதம் இந்திய ஐடி துறையில் சாத்தியப்படுத்த முடியும்.
பிரச்சனை
அதிகமான ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் காரணத்தால் குறைவான சம்பளத்தில் அதிகளவிலான ஊழியர்கள் பணியாற்றச் சந்தையில் ஆள் கிடைக்கும் இதனால் சராசரி சம்பள அளவீடுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் சம்பள உயர்வின் அளவுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மிகவும் நல்ல விஷயம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications