ஏஐ தொழில்நுட்பம், டெக் சேவையில் பில்லிங் முறையில் மாற்றம், திறன் தட்டுப்பாடு எனப் பல காரணத்தால் ஐடி சேவைத் துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்த வர்த்தக மாற்றத்தால் ஐடி சேவைத் துறையில் இழக்கும் வேலைவாய்ப்புகளை ஜிசிசி நிறுவனங்கள் மூலம் ஈடு செய்ய முடியும் என கூறப்பட்டு வருகிறது, இதற்கு ஏற்றார் போல் இந்தியா முழுவதும் ஜிசிசி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜிசிசி நிறுவனங்கள் மூலம் அதிகப்படியான டெக் ஊழியர்களும், அதிக சம்பளமும் கொண்ட வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியாவில் இயங்கி வரும் சில ஜிசிசி நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தையும், ஆப்ரேஷன்ஸ், ஊழியர்களையும் திறம்பட நிர்வாகம் செய்ய முடியாத காரணத்தால் ஐடி சேவை நிறுவனங்களுக்குக் கைமாற்றியுள்ளது. இதனால் சுமார் 20000 ஜிசிசி நிறுவனங்களின் புகலிடமாக இந்திய ஐடி சேவைத் துறை நிறுவனங்களாக மாறியுள்ளது.
உதாரணமாக டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவின் Best Buy நிறுவனத்தின் இந்திய ஆப்ரேஷன்ஸ்-ஐ மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது, இதேபோல் ஹெச்சிஎல் டெக் நிறுவனம் Guardian Life நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை மொத்தமாக 10.5 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளது.
இதேபோல் விப்ரோ ஓலம் குரூப்-ன் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான Mindsprint நிறுவனத்தின் 8 வருட திட்டத்தை 386 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது. இது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு இந்திய ஐடி சேவை நிறுவனமும் இந்தியாவில் தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ சரி வர நிர்வாகம் செய்ய முடியாத ஜிசிசி நிறுவனத்தை முழுமையாகவோ அல்லது தனிப் பிரிவையோ கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியுள்ளது.
கடந்த 12 மாதத்தில் இந்திய ஜிசிசி நிறுவனங்களில் இருந்து சுமார் 20000 ஊழியர்கள் ஐடி சேவை நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். சந்தையில் புதிய வர்த்தகத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கும் காரணத்தால் புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடி வரும் இந்திய ஐடி சேவைத் துறைக்கு ஜிசிசி நிறுவனங்களைக் கைப்பற்றுவது முக்கியமான வர்த்தக வாய்ப்பாக மாறியுள்ளது.
கடந்த 12 மாதத்தில் மட்டும் சுமார் 1.3 - 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிசிசி வர்த்தகம் கைமாறியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் நாட்டின் டெக் துறை வளர்ச்சியில் மீண்டும் ஆதிக்க நிலையை அடையத் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

