2025 ஆம் ஆண்டு ஐடி துறையில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு மிக மோசமான ஒரு ஆண்டு என கூறலாம். டிசிஎஸ் , அமேசான், கூகுள் , மைக்ரோசாப்ட் , மெட்டா என பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்த ஆண்டில் பெருமளவிலான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை , மேக்ரோ பொருளாதார சூழல், அமெரிக்க பொருளாதார மந்த நிலை என பல்வேறு காரணங்கள் இதற்கு முன் வைக்கப்பட்டன. ஐடி துறையே மந்தமாக தான் இருந்தது என கூறலாம். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு ஐடி துறையினருக்கு எப்படி இருக்கும் , குறிப்பாக ஐடி துறையில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் ஏற்கனவே இருக்கக்கூடிய வேலை நீடிக்குமா அல்லது மேலும் பணி நீக்கங்கள் அதிகரிக்குமா, நிறுவனங்கள் எந்த மாதிரியான உத்தியை கையாளும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

கொரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் டெக் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணியில் அமர்தின. அதன் பிறகு நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது, அதேவேளையில் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தது . எனவே நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் 2026 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் மிக கவனமாக ஊழியர்கள் பணியமர்த்தலை மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது. அதாவது புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தெளிவான வருவாய் கணிப்பும் நீண்ட கால உத்திக்கு பொருந்தும் என்ற நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழியர்கள் பணியமர்த்தலை மேற்கொள்ளும் .
பழைய நடைமுறைப்படி திடீரென ஒரே சமயத்தில் நிறைய பேரை வேலை கெடுப்பது, பெஞ்ச் அடிப்படையில் அவர்களுக்கு வேலைகளை ஒதுக்குவது உள்ளிட்டவை 2026 இல் மாற்றம் அடையும் என சொல்லப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் ஐடி துறையில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பது இருக்கும் ஆனால் இதற்கு முன்பு இருந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மிக கவனமாக நிறுவனங்கள் இதை கையாளும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2026 ஆம் ஆண்டில் ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பக்கூடிய நபர்கள் பின்வரும் துறைகளில் நிபுணத்துவம் பெற வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . குறிப்பாக சேர்த்து ஏஐ, சைபர் செக்யூரிட்டி, டேட்ட் இன்ஜினியரிங் , பிளாட்பார்ம் மாடனைசேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றால் வேலை நீடிக்கும் எனக் கூறுகின்றனர் .
இனி நிறுவனங்களில் உயர் திறன் கொண்ட நபர்களுக்கு தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகின்றனர் பொதுவான ஐடி வேலைகளுக்கு டிமாண்ட் சற்று மந்தமாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது . மேலும் கேம்பஸ் பிளேஸ்மென்ட் எதிர்பார்த்த அளவு இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஜுனியர் பணிகளுக்கு நிறுவனங்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்தும் என்பதால் கேம்பஸ் பிளேஸ்மென்ட் குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐடி துறையை விட ஜிசிசி மையங்களில் வேலை அதிகரிக்கும் என்றும் டேட்டா அனலிட்டிக்ஸ், கோர் இன்ஜினியரிங் பிராடெக்ட் ஆகியவற்றில் பிரிவுகளில் நல்ல வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications