ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. Hfs கணிப்பு..!

பெங்களுரு: தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக சேவைகளின் செலவினங்கள், நடப்பு ஆண்டில் 10 சதவீதம் குறையலாம் என்றும் ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இது கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் காரணமாக தொழில் துறைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதன் காரணமாக தொழில் நுட்பத் தேவையானது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில்துறை சேவை Hfs research ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு என்றாலே, முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் பணி நீக்கம் தான். ஆக இதனால் பெரிதும் பாதிக்கப்பட போவதும் ஐடி ஊழியர்கள் தான்.

செலவு குறையலாம்

செலவு குறையலாம்

2020ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தாக்கம் அனைத்து முக்கிய மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க சந்தைகளிலும் 10 - 15 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக ஐடி துறைகளில் தகவல் தொழில் நுட்ப சேவைகளின் செலவுகளில் கூர்மையான வீழ்ச்சியை காணலாம் என்றும் கூறப்படுகிறது.

இது மட்டும் வளர்ச்சி காணலாம்

இது மட்டும் வளர்ச்சி காணலாம்

அடுத்த 2021ம் ஆண்டின் இரண்டாம் பாதி வரை கொரோனா வைரஸ் பொருளாதார மீட்சிக்கு சாத்தியமில்லை என்று, இது குறித்து Hfs research தெரிவித்துள்ளது. எனினும் டிஜிட்டல் தொழில் நுட்பம், கிளவுட் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற பகுதிகளில் சில அற்புதமான முன்னேற்றங்களை நாங்கள் கொண்டிருந்தாலும், இதில் பல பகுதிகள் வீழ்ச்சி காணலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஐடி துறையில் அழுத்தம்

ஐடி துறையில் அழுத்தம்

மேலும் இந்த ஆய்வறிக்கையில் கொரோனாவின் காரணமாக பல சவால்கள் நிலவி வருகின்றன. ஆக இது செலவினை குறைக்க வழிவகுக்கும். இது ஐடி துறைக்கு சற்று அழுத்தத்தினை கொடுக்கலாம். எனினும் இதன் அழுத்தம் முதல் காலாண்டு வருவாயில் எதிரொலிக்காது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக இது ஐடி துறையில் நிச்சயம் ஒரு அழுத்தினை உருவாக்கும்.

அடுத்த ஆண்டில் பாதிப்பு இருக்கும்

அடுத்த ஆண்டில் பாதிப்பு இருக்கும்

எனினும் சந்தையில் மிதமான வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கலாம். தற்போது கொரோனாவின் காரணமாக ஒப்பந்தங்கள் கணிசமாக குறைந்து வருகிறது. இது 2022ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே ஒப்பந்தங்கள் பாதியாக குறைவதை நாங்கள் கண்டோம். மேலும் நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக வேலை அளவும் கணிசமாக குறைந்துள்ளது. ஆக முன்பைபோல் நிறுவனங்களும் செயல்படவில்லை என்று Hfs அறிக்கை தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+