உலகின் பல நாடுகளும் தற்போது கொரோனா என்னும் அலையில் சிக்கிக் கொண்டு தவித்து வருகின்றன. அதிலும் சில நாடுகளில் தற்போது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அலை என பரவி வருகின்றது.
இதன் காரணமாக பல துறையை சார்ந்த நிறுவனங்களும் ஊழியர்களை, வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டில்; இருந்தே டிஜிட்டல் சேவை என்பது அதிகரித்து வருகிறது.
இதுவரை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறாத நிறுவனங்கள் கூட, டிஜிட்டல் வளர்ச்சியினை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஐடி துறையில் மட்டும் அல்லாது, பல துறைகளிலும் ஐடி திறனுள்ள ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
வளர்ச்சி பாதையில் ஐடி துறை
கொரோனாவின் காரணமாக தொழில்நுட்ப வளர்ச்சியானது ஒரு படி மேலே சென்றுள்ளது எனலாம். குறிப்பாக கடந்த ஆண்டில் பல துறைகளும் கொரோனா காரணமாக முடங்கியிருந்த நிலையில் கூட, ஐடி துறை மட்டும் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக ஐடி துறையினருக்கு புதிய பல ஒப்பந்தங்கள் கிடைத்தன. வளர்ச்சியும் மேம்பட்டது. அதோடு ஐடி திறனுள்ளவர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்தது.
தேவை அதிகரிப்பு
குறிப்பாக ஐடி துறை மற்றும் பல துறைகளில் ஐடி திறனுள்ள ஊழியர்களுக்கான தேவை வளர்ச்சி 22.5% வளர்ச்சி கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த வளர்ச்சியானது அக்டோபர் 2020 முதல் மார்ச் 2021க்குள் கண்டது. குறிப்பாக இந்த தேவை வளர்ச்சியானது BFSI, தொழில்நுட்ப சேவை, கன்சல்டிங், குளோபல் கேபபிலிட்டி செண்டர்கள் ஆகியவற்றில் அதிகம் காணப்பட்டது.
என்னென்ன திறன்கள்?
மேலும் Salesforce, SAP HANA, and ServiceNow உள்ளிட்ட பிளார்ட்பார்ம்கள் தேவை அதிகரிப்பதை காண்பதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு அதிகம் உள்ள தேவைகளில் டாப் லெவலில் இருப்பது கிளவுட் சேவை, இன்ஃப்ரா டெக்னாலஜிஸ், ஆண்டிராய்ட் டெவலப்பர்ஸ், Angular JS, உள்ளிட்ட டிஜிட்டல் திறன்கள் உள்ளவர்களுக்கு அதிக தேவை உள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. .
வாய்ப்புகள் ஏராளம்
மேற்கண்ட துறைகளில் கடந்த நிதியாண்டில் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் கணிசமான வளர்ச்சியினை, அதாவது பணியமர்த்தலை அதிகரித்துள்ளன. அதோடு தற்போதும் நிறுவனங்கள் சுறுசுறுப்பான ஆக்கப்பூர்வமான மற்றும் திறமையான ஊழியர்களை எதிர்பார்க்கின்றனர். மொத்தத்தில் நல்ல திறனுள்ள ஊழியர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
சிறந்த வழி இது தான்
ஆக அந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டுமெனில், நமது திறனை நாம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப, நாம் நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஐடி துறையில் மட்டும் அல்ல, மற்ற துறைகளிலும் இதே நிலை தான். ஆக திறனை வளர்த்துக் கொள்வதே வாய்ப்புகளை அடைய சிறந்த வழி.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications