இந்திய ஐடி துறை பங்குகள் இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகி வருகிறது என்றால் மிகையில்ல, ஏற்கனவே பெரும் சரிவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்திய ஐடி சேவை நிறுவன பங்குகள் இன்று பெரும் விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் Nifty IT இன்டெக்ஸ் 4%க்கும் மேல் சரிந்து 4 மாத குறைந்த அளவை எட்டியது. மேலும் ஒரே நாளில் IT நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.1.3 லட்சம் கோடி குறைந்ததுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்திய முதலீட்டு சந்தையை பொருத்தவரையில் வங்கி மற்றும் நிதி சேவை துறை பங்குகளுக்கு பின்பு டெக் நிறுவன பங்குகள் மிகவும் விருப்பமான முதலீட்டு தளமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் ஏஐ ஆதிக்கம், வருவாய் சரியும் என்ற அச்சம், டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவை தற்போது இந்திய ஐடி துறைக்கு எதிராக திரும்பியுள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் TCS, Infosys, Wipro, HCL Tech, Mphasis உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 4% முதல் 5% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த திடீர் வீழ்ச்சிக்கு இரண்டு பெரிய காரணங்கள் உள்ளன.
AI அச்சம் தான் முதல் காரணம்
முதலாவது காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த அச்சம். Anthropic என்ற அமெரிக்கா நிறுவனம் "Claude Cowork" என்ற புதிய AI கருவியில் 11 பிளகின்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்கள் வழக்கமாக ஐடி சேவை நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் பல பணிகளை தானாகச் செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாணமாக ஒப்பந்தங்களை ஆய்வு செய்வது, சட்ட ஆவணங்களை தயாரிப்பது, விதிமுறைகள் பின்பற்றி பணிகளை முடிப்பது, வழக்கமான அலுவலக பணிகள் போன்ற பல செயல்பாடுகளை மனிதர்களின் உதவியின்றி செய்ய முடியும் என கூறப்படுகிறது. இதுவரை இத்தகைய சேவைகள் வாயிலாக தான் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை உருவாக்கி வந்தது. தற்போது Claude Cowork மூலம் இது முழுமையாக செய்யப்படும் பட்சத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
முன்பு AI தொழில்நுட்பம் ஐடி நிறுவனங்களுக்கு உதவும் கருவி என கருதப்பட்டது. ஆனால் இப்போது அதே AI தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மாற்றிவிடுமோ என்ற அச்சம் உருவாக்கியுள்ளது. சில சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்ட டெக் சேவை பிரிவுகளில் வருமானம் 40% வரை குறையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாற்றமே முதலீட்டாளர்களை பதற்றத்தில் பங்குகளை விற்பனை செய்ய தூண்டியுள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவின் தாக்கம்
இரண்டாவது காரணம் அமெரிக்க பொருளாதார தரவுகள். கடந்த மாதம் அமெரிக்காவில் 1,30,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளன. வேலைவாய்ப்பு இல்லாதோரின் விகிதம் 4.3% ஆக குறைந்துள்ளது. இது அமெரிக்க பொருளாதாரம் இன்னும் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.
அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருந்தால், அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை உடனடியாகக் குறைக்க வாய்ப்பு குறையும். வட்டி விகிதக் குறைப்பு இல்லையெனில் வளர்ச்சி சார்ந்த பங்குகள், குறிப்பாக ஐடி பங்குகள் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையக்கூடும். இதுவும் இந்திய ஐடி பங்குகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
TCS-ன் மோசமான நிலை
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS பங்குகள் இன்று 4.8% சரிந்து 2,766.00 ரூபாய் என்ற 52 வார குறைந்த விலையைத் தொட்டது. மேலும், அதன் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவில் இருந்து கீழே சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெரிய மற்றும் நிலையான நிறுவனம் கூட இவ்வாறு சரிவடைந்தால், அது முழு துறையிலும் அச்சத்தை அதிகரிக்கும். இதுதான் இன்று நடந்துள்ளது.
தமிழ்நாடு IT துறைக்கு பெரும் அதிர்ச்சி
தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய IT ஹப்களில் ஒன்று. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் TCS, Infosys, Wipro, HCL Tech போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
AI கருவிகள் டெக் பணிகளை ஆட்டோமேட் செய்யத் தொடங்கியால், குறிப்பாக ஃப்ரெஷர்கள் மற்றும் நடுத்தர அளவிலான ஊழியர்களுக்கு பணிநீக்க அபாயம் அதிகரிக்கும். சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, EMI, கல்வி செலவு ஆகியவற்றுடன் போராடும் இளைஞர்களுக்கு இந்த சரிவு வேலைவாய்ப்புகளை பெறுவதில் சவாலை உருவாக்கும்.
தமிழ்நாடு IT ஊழியர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் IT துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இப்போது பெரும் கவலையில் உள்ளனர். AI தொழில்நுட்பம் பணிகளை எடுத்துக்கொள்ளும் என்ற அச்சம், வேலை இழப்பு, சம்பள உயர்வு தாமதம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களில் உள்ள IT ஊழியர்கள் தங்கள் திறன்களை AI பிரிவில் மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தும் ஊழியர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சரிவு தற்காலிகமானதா அல்லது நீண்டகால மாற்றத்தின் தொடக்கமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரியவரும். தமிழ்நாட்டு இளைஞர்கள் AI திறன்களை விரைவாக கற்றுக்கொண்டு தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.
Frequently Asked Questions (FAQs)
1. IT பங்குகள் ஏன் 4% சரிந்தன?
அமெரிக்க AI நிறுவனம் Anthropic-ன் Claude Cowork கருவி அறிமுகமானது முக்கிய காரணம். இது கம்பியூட்டர் கோடிங் தவிர அனைத்து அலுவலகப் பணிகளையும் தானாக செய்யும் திறன் கொண்டாதாக உள்ளது. இதனால் பல்வேறு துறை சேர்ந்த நிறுவனங்கள் டெக் சேவைகளை வங்கும் இந்திய IT நிறுவனங்களின் வர்த்தகம் குறைந்து வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர்.
2. தமிழ்நாட்டில் IT ஊழியர்களுக்கு பணிநீக்க அபாயம் உள்ளதா?
ஆம், அதிக அபாயம் உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் TCS, Infosys, Wipro போன்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். AI கருவிகள் பணிகளை தானியங்கி செய்யத் தொடங்கியால், ஃப்ரெஷர்கள் மற்றும் நடுத்தர ஊழியர்களுக்கு பணிநீக்க அபாயம் அதிகரிக்கும். வீட்டு வாடகை, EMI, கல்வி செலவு ஆகியவற்றை சமாளிக்கும் இளைஞர்களுக்கு இது பெரும் அதிர்ச்சி.
3. தமிழ்நாடு IT ஊழியர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
தங்கள் திறன்களை AI உடன் இணைத்து மேம்படுத்த வேண்டும். AI கருவிகளை திறமையாக பயன்படுத்தி வேலை செய்யும் ஊழியர்களை மட்டுமே நிறுவனங்கள் தக்க வைத்துக்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள இளைஞர்கள் AI திறன்களை விரைவாக கற்றுக்கொண்டு தயாராக வேண்டும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications