இந்திய பங்குச்சந்தையில் கடந்த 10 நாட்களாக ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் Nifty IT இன்டெக்ஸ் 4%க்கும் மேல் சரிந்து 4 மாத குறைந்த அளவை எட்டியது. மேலும் ஒரே நாளில் IT நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.1.3 லட்சம் கோடி குறைந்ததுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

முதலீட்டாளர்கள் "AI வந்துவிட்டால் ஐடி துறை அழிந்துவிடும்" என்ற அச்சத்தில் பங்குகளை விற்று வருகின்றனர். ஆனால் IME கேப்பிட்டல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆஷி ஆனந்த் இதை "அதிகப்படியான பயம்" என்று கூறுகிறார்.
AI அழிவு அல்ல - மாற்றம் மட்டுமே
ஆஷி ஆனந்த் கூறுகையில் ஈடி நவ்-க்கு அளித்த பேட்டியில், AI நிச்சயம் ஐடி நிறுவனங்களின் பணியாற்றும் முறையை மாற்றும். ஆனால் அது முழு துறையையும் அழிக்காது. தற்போது பெரிய அளவிலான ஊழியர்கள் தேவைப்படும் பணிகளை AI கருவிகள் வேகமாகவும், குறைந்த ஆட்களுடனும் முடிக்கும் திறனை பெறும். இதனால் ஒரு திட்டத்தை முடிக்க குறைவான செலவு ஆகும். இதை அவர் வெறும் "வருவாய் குறைவு" (revenue deflation) என்று அழைக்கிறார்.
வருவாய் குறைந்தாலும் லாபம் அதிகரிக்கும்
வருவாய் சற்று குறைந்தாலும் லாபம் குறைய வேண்டிய அவசியமில்லை என்று ஆஷி ஆனந்த் விளக்குகிறார். ஊழியர் எண்ணிக்கை குறைவதால் செலவு பெருமளவு குறையும். இதனால் லாப வீதம் (profit margin) உயரும். வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் கொடுத்தாலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் நிலையாகவோ அல்லது சற்று உயர்ந்தோ இருக்கும் என ஆஷி ஆனந்த் கூறுகிறார்.

தமிழ்நாடு ஐடி துறைக்கு நல்ல செய்தி..?
தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மையங்களில் ஒன்றாக இருக்கும் வேளையில் ஏஐ மூலம் இத்துறையில் வரும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கத தாக்கத்தை ஐடி சேவை துறையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் TCS, Infosys, Wipro, HCL Tech போன்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
AI வந்தாலும் பெரிய அளவிலான பணிநீக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஆஷி ஆனந்த் நம்பிக்கை தருகிறார். ஏனெனில் AI காரணமாக ஒரு ஊழியர் முன்பை விட அதிக வேலை செய்ய முடியும். இதனால் நிறுவனங்கள் அதிக திட்டங்களை எடுத்துக்கொள்ளலாம். ஊழியர் பற்றாக்குறை பிரச்சினை தீரும். தமிழ்நாட்டு ஐடி ஊழியர்களுக்கு AI திறன்களை கற்றுக்கொண்டால் வேலை பாதுகாப்பு அதிகரிக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

குறுகிய காலத்தில் லாபம் பாதிக்கப்படாது
இதேபோல் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தால் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ஐடி நிறுவனங்களின் லாபம் பெரிதாக பாதிக்கப்படாது என்று ஆஷி ஆனந்த் கூறுகிறார். உலகெங்கும் தொழில்நுட்ப செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. AI வந்தாலும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
பங்கு விலைகள் சரிந்துள்ள நிலையில், புதிதாக முதலீடு செய்துள்ளவர்களுக்கு சாதகமாக மதிப்பீடுகள் (valuations) இப்போது குறைந்துள்ளன. இதனால் ஏஐ துறையில் வளர்ச்சி அடையும் ஐடி நிறுவன பங்குகள் சரிவில் இருந்து வேகமாகவும், அதிகமாகவும் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.

எதிர்கால ஐடி துறை
ஐடி நிறுவனங்கள் AI-ஐ தங்கள் சேவையில் இணைத்து புதிய AI அடிப்படையிலான சேவைகளை உருவாக்கினால், துறை இன்னும் வலுவடையும் என்று ஆஷி ஆனந்த் நம்பிக்கை தருகிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் AI திறன்களை விரைவாக கற்றுக்கொண்டு தயாராகினால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த சரிவு தற்காலிக பயம் மட்டுமே - நீண்டகாலத்தில் ஐடி துறைக்கு பெரும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications