அமெரிக்கா : தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவானாக கருதப்படும் ஜெகதீஷ் மித்ரா ஜெனரேட்டிவ் ஏஐ அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 முதல் 1000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க இருக்கிறது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் இந்தியாவின் பிசினஸ் பிரிவு தலைவராக பணியாற்றி வந்தவர் தான் ஜெகதீஸ் மித்ரா. இவர் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜெனரேட்டிவ் ஏஐ அடிப்படையில் செயல்படும் SaaS நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கு ஹியூமனைஸ் Humanize என அவர் பெயர் சூட்டி உள்ளார்.

இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெக் மஹிந்திராவில் இருந்து வேலையை ராஜினாமா செய்தார். இவர் தற்போது Humanize என்ற software-as-a-services எனப்படும் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் ஸ்டார்ட்அப்-ஐ தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஜெகதீஷ் மித்ரா செயற்கை நுண்ணறிவின் திறனை எளிமையாக பயன்படுத்தும் வகையில் தற்போது நல்ல தரவு அமைப்பு கொண்ட நடைமுறை இல்லாமல் இருப்பதுதான் பல்வேறு தொழில்களுக்கும் பிரச்சினையாக இருக்கிறது.
எனவே Humanize நிறுவனத்தில் இதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்திருக்கிறோம் என கூறியுள்ளார். Humanize நிறுவனம் ஜெனரேட்டிவ் கிட் என்பதை உருவாக்க இருப்பதாகவும் இதன் மூலம் சாஸ் தளங்கள் 15 முதல் 25 சதவீதம் வரை வேகமாக செயல்பட கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மென்பொருட்களை ஒரு சேவை தொழில்நுட்பமாக எடுத்துக்கொண்டு அத்துடன் செயற்கை நுண்ணறிவின் நுட்பங்களையும் சேர்க்க இருக்கிறோம். இதன் காரணமாக வேலைப்பளு கணிசமான அளவு குறையும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்புதான் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்த சிபி குருநாணி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை தொடங்கினார் . அவரைப் பின்பற்றி தற்போது ஜெகதீஷ் மித்ராவும் ஸ்டார்ட் அப்பை தொடங்கியுள்ளார். அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் Humanize நிறுவனம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
மித்ரா தங்கள் நிறுவனத்தின் இலக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா என கூறுகிறார். குறிப்பாக ஜிசிசி மையங்களே தங்கள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு என தெரிவித்துள்ளார். நீண்ட கால அடிப்படையில் தென்கிழக்கு ஆசியா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளார்.
Humanize நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுபவம், விநியோக சங்கிலி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்றினை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவிலும் தனது அலுவலகத்தை திறந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications