ஒட்டுமொத்த இன்டர்நெட் உலகையும் புரட்டிப்போட்ட ChatGPT-க்கு முதல் முட்டுக்கட்டையாக இத்தாலி அரசு, அந்நாட்டில் ChatGPT-ஐ பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் மொத்தமாக முடக்கியுள்ளது. டெக் உலமே இனி எதிர்காலமே ChatGPT தான் என நம்பும் வேளையில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல நிறுவனங்கள், பல சேவைகளை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் இத்தாலி நாட்டின் தனிநபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை ChatGPT-ஐ பிளாக் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இத்தாலி கூறுவது ChatGPT அதன் பயனர் தரவுகளை மதிப்பது கிடையாது, இதேபோல் பயனர் வயதை சரிபார்ப்பது இல்லை என்பதை காரணம் காட்டி முடக்கியுள்ளது.
இத்தாலி அரசு இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துகிறது. இதனால் இத்தாலி மக்கள் ChatGPT சேவையை பயன்படுத்த முடியாத, இதேபோல் openAI இத்தாலி சர்வரில் இருந்து வரும் கோரிக்கைகளை ஏற்க முடியாது. சில நாட்களுக்கு முன்பு தான் எலான் மஸ்க் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் முக்கியமான விஷயத்தை கூறினர்.
ChatGPT தொழில்நுட்பம்
ChatGPT-ஐ உருவாக்கி OPENAI நிறுவனத்தின் ஆரம்பக்கட்டத்தில் எலான் மஸ்க் முதலீடு செய்து முக்கிய உறுப்பினராக இயங்கி வந்த நிலையில், பின்னாளில் செயற்கை நுண்ணறிவு-ன் ஆதிக்கத்தை பார்த்து இது சரியான திசையில் செல்லவில்லை என்பதை உணர்ந்து வெளியேறினார். இதன் பின்பு தான் ChatGPT அறிமுகமானது.
செயற்கை நுண்ணறிவு
இந்த நிலையில் மனிதர்களை காட்டிலும் செயற்கை நுண்ணறிவு பலம் அடைவது ஒருப்பக்கம் இருக்க, இதனால் மக்களும், உலகிற்கும் என்ன நன்மை என்பதை ஆய்வு செய்து தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். இதற்காக அடுத்த 6 மாதத்திற்கு ChatGPT தளத்தில் எவ்விதமான வளர்ச்சி பணிகளை செய்ய கூடாது என்று எலான் மஸ்க் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் ஓப்பன் லெட்டரில் கையெழுத்திட்டு உள்ளனர்.
சக்திவாய்ந்த GPT-4
OPENAI நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த GPT-4 இதுவரையில் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. இது மனிதர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.
இத்தாலி வாட்ச்டாக் அமைப்பு
இந்த நிலையில் தான் இத்தாலி வாட்ச்டாக் அமைப்பு ChatGPT தளத்தை அந்நாட்டில் முடக்குவதாக அறிவித்துள்ளது. உலகில் முதல் நாடாக ChatGPT தளத்தை இத்தாலி முடக்கியுள்ளது, ஆனால் சீனா, ரஷ்யா, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இதை ஆரம்பத்தில் இருந்த மக்கள் பயன்படுத்த முடியாமல் முடக்கப்பட்டு உள்ளது.
20 நாள் காலஅவகாசம்
இத்தாலி வாட்ச்டாக் அமைப்பு OpenAI நிறுவனத்திற்கு 20 நாள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. இக்காலக்கட்டத்தில் முறையான விளக்கம், மாற்றங்கள் செய்தால் கட்டாயம் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ChatGPT மீதான தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
ChatGPT குறித்து உங்களுடைய கருத்து என்ன..? ChatGPT தொடர்ந்த வளர்வது மனிதர்களுக்கும், வேலைவாய்ப்பு சந்தைகளுக்கும் நல்லதா..? எலான் மஸ்க், ஸ்டீவ் வாஸ்னியாக் கூறுவது போல் 6 மாதம் ChatGPT பணிகளை முடிக்கிவிட்டு அதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்வது சரியாக இருக்குமா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications