திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான், குறிப்பாக இந்திய திருமணங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் சமீபத்தில் இந்தியாவில் Destination wedding, பாரின் வெட்டிங் போன்றவை மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.
இதற்கு ஏற்றார் போல், உலக நாட்டு மக்களைத் தங்களது கனவு திருமணத்தை இத்தாலி நாட்டில் செய்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இத்தாலியின் Lazio பகுதியில் திருமணம் செய்து கொண்டால் மிகப்பெரிய தொகையைப் பரிசாக அளிக்கவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தாலி - லாசியோ
மத்திய இத்தாலியின் முக்கியமான லாசியோ பகுதியில், கொலோசியம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடக்கலை நினைவுச் சின்னங்கள் மற்றும் ஸ்பானிஷ் படிகள் மற்றும் ட்ரெவி நீரூற்று உள்ளிட்ட பல பிரபலமான இடங்கள் உள்ளது. திருமணத் தளங்கள் அனைத்தும் லாசியோவில் அமைந்துள்ளன.
ரூ.1,67,000 வரை
இந்நிலையில் லாசியோ பகுதியில் திருமணம் செய்து கொள்ள உலக நாடுகளில் இருந்து மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டவர்கள் ஈவென்ட் நிறுவனங்கள், கேட்டரிங், பூ அலங்காரம் மற்றும் இதர திருமண அலங்காரத்திற்காக அதிகளவில் செலவுக்குச் செய்ய வேண்டும் என்பதால் இத்தாலி அரசு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 2,000 யூரோ வரை அதாவது சுமார் ரூ.1,67,000 வரை பணத்தை ரீபண்ட் அளிக்கிறது.
10 மில்லியன் யூரோ
"Lazio with love" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டத்திற்குச் சுமார் 10 மில்லியன் யூரோ அதாவது சுமார் 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது இத்தாலி அரசு. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் மட்டும் அல்லாமல் அதிகப்படியான வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்களுக்கு உருவாக்கித்தர முடியும்.
ராட் கோலி - அனுஷ்கா ஷர்மா
பிரபலங்கள், பணக்காரர்கள் மத்தியில் திருமணங்களுக்கு இத்தாலி முக்கியம் விருப்பமான இடமாக உள்ளது. விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம், கிம் கர்தாஷியன், கன்யே வெஸ்டின் திருமணம் எனப் பல பிரபலங்களின திருமணம் இத்தாலியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா
கொரோனா காரணமாக இத்தாலியில் குறிப்பாக Lazio திருமணம் செய்யும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்தது. இதனால் திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்களைச் சார்ந்து இருக்கும் வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது.
வர்த்தகம்
தற்போது இத்தாலியின் "Lazio with love" திட்டம் மூலம் அதிகப்படியான மக்கள் திருமணம் செய்ய இத்தாலிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் இப்பகுதியில் வர்த்தகம் மேம்படும் எனவும் இத்தாலி மக்கள் நம்புகின்றனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications