ஐடிசி-யின் புதிய என்ட்ரி.. இதுல நாங்க தான் கிங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய இளைஞர்கள் மத்தியில் உணவு பழக்கம் வேமாக மாறிவரும் வேளையில் பிசியான வாழ்க்கையில் சாப்பிட கூட நேரம் இல்லாமல் சுற்றும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இவர்களுக்கான உணவு அதிலும் முக்கியமாக ஆரோக்கியமான உணவை அளிக்கும் விதமாக எனர்ஜி பார் சாப்பிடும் வழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

 

உலக நாடுகளில் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் மக்களுக்குச் சரியான ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் என்பதற்காக எனர்ஜி பார் எனப்படும் அதிக ப்ரோடீன் சத்து நிறைந்த சிறு தானியம், பழங்கள், நட்ஸ் வகைகள் கொண்ட எனர்ஜி பார் அறிமுகமாகி பிரபலமானது.

இந்தியாவில் இந்தக் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இத்துறையில் பல வருடமாக வர்த்தகம் செய்து வரும் யோகா பார் என்ற பிராண்டை ஐடிசி மொத்தமாகக் கைப்பற்றி நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.

யாரும்மா நீ.. ஈஷா அம்பானி துவங்கிய புதிய FMCG பிராண்ட் Independence.. யூனிலீவர், ஐடிசி ஷாக்..! யாரும்மா நீ.. ஈஷா அம்பானி துவங்கிய புதிய FMCG பிராண்ட் Independence.. யூனிலீவர், ஐடிசி ஷாக்..!

ஐடிசி

ஐடிசி

இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனமாக விளங்கும் ஐடிசி, யோகா பார் பிராண்டின் உரிமையாளரான Sproutlife Foods ஸ்டார்ட்அப் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. D2C பிரிவில் இருக்கும் Sproutlife Foods நிறுவனம் பெரு நகரங்களில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது.

Sproutlife Foods நிறுவனம்

Sproutlife Foods நிறுவனம்

தற்போது ஐடிசி மற்றும் Sproutlife Foods நிறுவனம் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அடுத்த 3 - 4 வருடத்தில் மொத்த நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளது. இதில் முதல் கட்டமாக மார்ச் 2025 க்குள் பல கட்ட கைப்பற்றல் மூலம் 47.5 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.

175 கோடி ரூபாய் முதலீடு
 

175 கோடி ரூபாய் முதலீடு

இத்திட்டத்தின்படி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் 175 கோடி ரூபாய் முதலீடு செய்து 39.4 சதவீத பங்குகளை வாங்கவும், மார்ச் 31, 2025க்குள் மீதமுள்ள பங்குகளை 80 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்ற உள்ளது ஐடிசி.

பேலென்ஸ் ஷீட் கைப்பற்றல்

பேலென்ஸ் ஷீட் கைப்பற்றல்

மேலும் அடுத்த 3 மாதத்திற்குள் Sproutlife Foods நிறுவனத்தின் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டின் கீழ் பேலென்ஸ் ஷீட்-ஐ கைப்பற்ற உள்ளது ஐடிசி. 2021-22 ஆம் நிதியாண்டில் Sproutlife Foods நிறுவனம் சுமார் 68 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதலைப் பெற்றுள்ளது, இது 2019-20ல் 32 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யோகா பார்

யோகா பார்

யோகா பார் பிராண்டின் கீழ் ஊட்டச்சத்துப் பார்கள், மியூஸ்லி, ஓட்ஸ் மற்றும் தானியங்கள் உட்பட ஆரோக்கியம் சார்ந்த போர்ட்போலியோவைக் கொண்டுள்ளது. ஆப்லைன் ஸ்டோர்களில் இதன் வர்த்தகம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில், ஆன்லைன் விற்பனையில் சிறப்பாக இயங்கி வருகிறது.

ஆப்லைன் ஸ்டோர்

ஆப்லைன் ஸ்டோர்


ஆப்லைன் ஸ்டோர்களில் இதன் ஆதிக்கம் அதிகரிப்பது தான் ஐடிசி போன்ற பெரிய பிராண்டுகளுக்குப் பிரச்சனை. இந்த நிலையில் தான் Sproutlife Foods நிறுவனத்தை ஐடிசி வாங்க முடிவு செய்தது.

ஐடிசி

ஐடிசி

இதன் மூலம் ITC தனது future-ready போர்ட்போலியோவை விரிவாக்கம் செய்யவும், 'குட் ஃபார் யூ' இடத்தில் சந்தை இருப்பை அதிகரிக்கவும் Sproutlife Foods நிறுவனம் பெரிய அளவில் உதவும்.

ஐடிசி நிறுவன போர்ட்போலியோ

ஐடிசி நிறுவன போர்ட்போலியோ

ஐடிசி நிறுவனத்தின் 'Good for You' பிரிவில் தற்போது ஆசீர்வாத் மல்டி கிரேன் அட்டா, ஆஷிர்வாத் நேச்சர்-ஸ் சூப்பர் ஃபுட்ஸ், ஃபார்ம்லைட் பிஸ்கட், சன்ஃபீஸ்ட் புரோட்டீன் ஷேக், பி நேச்சுரல் நியூட்ரிலைட் ஏபிசி பானம் ஆகியவை அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ITC Buying Yoga bar company; Expanding its Good for You portfolio

ITC Buying Yoga bar company; Expanding its Good for You portfolio
Story first published: Wednesday, January 18, 2023, 17:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X