சிகரெட் மீதான கலால் வரி விதிப்பால் கடந்த வாரம் முழுக்க ஐடிசி நிறுவனம் தான் முதலீட்டு சந்தையிலும், வர்த்தக சந்தையிலும் முக்கிய பேசு பொருளாக இருந்தது. மத்திய அரசு விதித்திருக்கும் புதிய கலால் வரியால் ஒரு சிகரெட் விலை 5.4 ரூபாய் வரையில் உயரும் சூழ்நிலையில் அதன் வர்த்தகம், வருவாய் குறையும் என அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. இதேவேலையில் ITC-யின் ரகசிய பிஸ்னஸ் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவது ஐடிசி முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஐடிசி நிறுவனம் பல்வேறு வர்த்தகத்தை வைத்திருக்கும் வேளையில் எத்தனை பேருக்கு ஐடிசி புட் டெக் துறையில் இயங்கி வருவது தெரியும். ஆம் ஐடிசி நிறுவனம் தனது கிளவுட் கிச்சன் வாயிலாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பரீமியம் உணவுகளை தயார் செய்து ஸ்விக்கி, சோமேட்டோ வாயிலாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.
ஐடிசி நிறுவனத்தின் இந்த உணவு தொழில்நுட்ப வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. 3 நகரங்களை தாண்டி தனது கிளவுட் கிச்சன் சேவையை புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது ஐடிசி நிர்வாகம்.

இந்தியாவின் உணவு டெலிவரி சந்தை தற்போது சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது, 2030இல் இது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதேபோல் ஆண்டுக்கு 18-20 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டு உள்ளதால், ஐடிசி குழுமம் இப்பிரிவு வர்த்தகத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான வர்த்தகமாக பார்க்கிறது.
ஐடிசி-யின் இந்த புட் டெக் வர்த்தகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் முதல் முறையாக துவக்கப்பட்டது. தற்போது மூன்று தென்னிந்திய நகரங்களில் செயல்படும் இந்த சேவை, சமீபத்தில் மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மும்பை மற்றும் புனேயில் 14 மற்றும் 6 கிளவுட் கிச்சன்களுடன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள வேளையில் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் கூடுதலான சில கிளவுட் கிச்சன்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
ஐடிசி நிறுவனம் நான்கு பிராண்டுகளின் கீழ் பல்வேறு உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது. ஆஷிர்வாத் சோல் கிரியேஷன்ஸ், ஐடிசி மாஸ்டர் செஃப் கிரியேஷன்ஸ், சன்ஃபீஸ்ட் பேக்டு கிரியேஷன்ஸ், சான்ஷோ பை ஐடிசி மாஸ்டர் செஃப் ஆகிய பிராண்டுகளின் கீழ் தற்போது 65க்கும் மேற்பட்ட கிளவுட் கிச்சன்கள் செயல்படுகின்றன.
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 5 வருடமாக பல முக்கிய சோதனை முறையில் இப்பிரிவு வர்த்தகத்தில் அனுபவம் பெற்ற நிலையில், அடுத்த நிதியாண்டில் ஐடிசி தனது உணவு டெக் சேவையை வட இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, குருகிராம், நொய்டாவில் தொடங்க உள்ளது.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஐடிசியின் கிளவுட் கிச்சன் வர்த்தகம் மொத்த விற்பனை மதிப்பில் (GMV) 100 சதவீதம் CAGR அடிப்படையிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டும் இதே வேகம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையின் வளர்ச்சி இந்த வணிகத்துக்கு உந்துதலாக அமைகிறது. இதேபோல் மக்கள் தற்போது புதிய உணவுகளையும், ப்ரீமியம் உணவுகளையும், ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயர்தர ஹோட்டல் பிராண்டுகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் வாயிலாக உணவுகளை விற்பனை செய்யும் வர்த்தக மாடலை உருவாக்கி வருகின்றனர். இதில் ஐடிசி ஒரு முன்னோடி என்றால் மிகையில்லை.
ஐடிசி பொருத்த வரையில் சிகரெட் பிரிவு வர்த்தகத்திற்கு அப்பால் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியாகவே பார்க்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications