இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான ஐடிசி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 14.9 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சோலார் பவர் பிளாண்ட்-ஐ உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு உள்ள புதிய சோலார் பவர் பிளான்ட் சுமார் 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் தமிழ்நாட்டு வர்த்தகத்திற்குத் தேவையான மொத்த மின்சாரத்தில் 90 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
100 சதவீத மின்சாரம்
மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்திற்குச் சேவையான 100 சதவீத மின்சாரத்தையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளாக ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்
ஐடிசி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைத்துள்ள இப்புதிய சோலார் பவர் பிளாண்ட் சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்தச் சோலார் தளத்தின் மூலம் வருடத்திற்கு 22.2 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஐடிசி தமிழ்நாடு
இது தமிழ்நாட்டில் உள்ள ஐடிசி ஹோட்டல், உணவு உற்பத்தி தொழிற்சாலை, பேப்பர் உற்பத்தி தொழிற்சாலை, பிரின்டிங் மற்றும் பேகேஜிங் தொழிற்சாலையின் மின்சாரச் சேலையைப் பூர்த்திச் செய்யும் என எதிர்பார்ப்பதாக ஐடிசி தெரிவித்துள்ளது.
காற்றாலை, சோலார்
ஐடிசி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க அற்றல் பிரிவில் 138 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 14 மெகாவாட் சோலார் பவர் பிளான்ட், 53 மெகாவாட் சோலார் தளம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
பயோமாஸ் பாய்லர்
மேலும் ஐடிசி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி தளத்தை வைத்துள்ளது. சமீபத்தில் ஐடிசி நிறுவனம் மின்சார உற்பத்திக்காகப் பயோமாஸ் பாய்லர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
இதுவரை ஐடிசி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்திக்காகச் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.
1000 கோடி ரூபாய்
ஐடிசி நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, பீகார், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 20 தொழிற்சாலை, 9 ஹோட்டல், 6 அலுவலகக் கட்டிடங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications