இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் FMCG நிறுவனம் ஐடிசி லிமிடெட். இந்நிறுவனம் கொல்கத்தாவை தலைமயிடமாகக் கொண்ட ஒரு இந்திய நிறுவனமாகும். எப்எம்சிஜி துறை, ஹோட்டல்கள், வேளாண் வணிகம், தகவல் தொழில்நுட்பம், பேக்கேஜிங் என பல்வேறு வணிக பிரிவுகளின் கீழ் ஐடிசி லிமிடெட் செயல்பட்டு வருகிறது. சந்தை மூலதனத்தை பொறுத்தவரையில் ஐடிசி இந்தியா முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது.
ஐடிசி லிமிடெட் நிறுவனம் நார்வேயின் தாய் நிறுவனமான ஓர்க்லா ஏஎஸ்ஏவிடமிருந்து எம்டிஆர் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஈஸ்டர்ன் காண்டிமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களை 1.4 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மின்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு ரூ.11,480 கொடியாகும்.

ஒருவேளை இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் தென்னிந்திய உணவு சந்தையில் ஐடிசி இருப்பு வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓர்க்லா என்பது ஒரு பெரிய சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் MTR நிறுவனத்தையும், 2020 ஆம் ஆண்டில் ஈஸ்டர்ன் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது. இரண்டு நிறுவனங்களுமே இந்தியாவில் பிரபலமான உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும். குறிப்பாக MTR அதன் மசாலா பொருட்கள் மற்றும் உடனடி உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது.
ஐடிசி லிமிடெட் ஓர்க்லா நிறுவனத்திடமிருந்து எம்டிஆர் புட்ஸ் மற்றும் ஈஸ்டர்ன் காண்டிமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தினால் ஐடிசி-இன் தடம் மேலும் விரிவடையும். எம்டிஆர் மற்றும் ஈஸ்டர்ன் பிராண்டுகள் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது. 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 2,400 கோடிக்கும் அதிகமாக இந்நிறுவனம் வருவாய் ஈட்டியது. கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் இந்நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து கிடைக்கிறது.
1950-ஆம் ஆண்டு பெங்களூருவில் நிறுவப்பட்ட MTR ஃபுட்ஸ், வட அமெரிக்கா, மேற்கு ஆசியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் உட்பட உலகளவில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. FMCG பிராண்டான பிரசுமாவை ITC சமீபத்தில் வாங்கியது.
ஓர்க்லா நிறுவனம் ஐரோப்பிய நாடுகளைப் போலவே இந்திய உணவு சந்தை தோன்றினாலும் அவை மிகவும் போட்டித் தன்மை வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் உணவு பழக்க வழக்கங்கள் ஓரளவு அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான உணவு பழக்க வழக்கங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகள் இருப்பதால் போட்டியும் மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் வசிக்கும் நுகர்வோர் பிராண்டட் மசாலா பொருட்களை நோக்கி நகர்ந்து வருவதால் சந்தையில் போட்டி தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வீட்டில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களே அதிகம் புழங்கப்பட்டன. ஆனால் இப்போது பல பெரிய நிறுவனங்களும் பிராண்டட் மசாலா பொருட்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு அதிக விருப்பங்கள் உள்ளன. இது வியாபாரிகளுக்கு போட்டி தன்மையை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.
ஓர்க்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அட்லே விதார் நாகல் ஜோஹன்சன் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் நுகர்வோருக்கான சந்தை மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், இத்தாலிய சமையலறைக்கும் இந்திய சமையலறைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளதாகவும், தெற்கு, கிழக்கு மற்றும் வட இந்தியா பகுதிகளில் வெவ்வேறு வகையான பிராண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications