முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் தனது நிதியியல் வர்த்தக பிரிவை தனியாக பிரித்து முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான முதலீட்டு லாபத்தை கொடுத்தது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பையும் உயர்த்தும் ஒரு வாய்ப்பை கையில் எடுத்தது.
இதேபோன்ற ஒரு திட்டத்தை இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான ஐடிசி கையில் எடுத்துள்ளது. இந்த முடிவு குறித்த அறிவிப்பு வெளியிடும் முன்பே முக்கிய ஒப்புதலை இன்று பெற்றுள்ளது. திங்கட்கிழமை நடந்த முக்கிய நிர்வாக குழு கூட்டத்தில் ITC அதன் ஹோட்டல் வணிகத்தை தனியாக பிரிப்பதற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது என்று நிறுவனம் ஒரு பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், ஐடிசி நிறுவனம் தனியாக பிரிக்கப்படும் ஹோட்டல் வணிகத்தில் சுமார் 40% பங்குகளை வைத்திருக்கும், மீதமுள்ள பங்கு நிறுவனத்தின் பங்குதாரர்கள் தற்போது நிறுவனத்தில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகிதாசார அடிப்படையில் வைத்திருக்கும் என்றும் ஐடிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 14 அன்று நடக்க உள்ள அடுத்த நிர்வாக குழு கூட்டத்தில் மற்ற ஏற்பாடுகளுக்கான குறிப்பாக பங்குகளின் விகிதம் குறித்த முடிவுகள் எடுக்கப்படும். SEBI விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் படி அடுத்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என ஐடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ஐடிசி நிர்வாகம் அதன் வேகமாக வளர்ந்து வரும் உணவு பிரிவு வணிகங்கள் மற்றும் ஃபுட் டெக் போன்ற புதிய முயற்சிகளில் அதிக கவனம், முதலீடுகளை செய்ய வழிவகுக்கும். இதேபோல் தற்போது ஐடிசி குழுமத்தில் ஹோட்டல் வணிகம் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக மட்டும் அல்லாமல் தனி நிறுவனமாக பிரித்து முதலீட்டாளர்களுக்கும் வர்த்தக சந்தைக்கும் ஏற்ற நிறுவனமாக இருக்கும் ITC தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் உள்ளது.
ITC ஹோட்டல் பிரிவின் கீழ் தற்போது 120 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களையும் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 11,600 ரூம்கள் உடன் இயங்கி வருகிறது. ஐடிசி நிறுவனத்தின் Demerger இந்நிறுவன பங்குகளை 50 சதவீதம் வரையில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications