ஐடிசி-யின் தரமான சம்பவம்.. ஓரே மாதத்தில் 25% வளர்ச்சி..!

இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு லாக்டவுன் காலத்தில் குறிப்பாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 204 ரூபாயில் இருந்து 163 ரூபாய் வரையில் சரிந்தது. இதனால் பங்கு முதலீட்டாளர்கள் டிவிட்டரில் சரமாரியாக இந்நிறுவனத்தைக் கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே மீண்டு வந்துள்ளது.

அதிரடி வளர்ச்சி

அதிரடி வளர்ச்சி

ஐடிசி நிறுவனப் பங்குகள் வர்த்தகச் சரிவு உட்படப் பல்வேறு காரணங்களுக்காக அக்டோபர் மாதத்தில் அதிகளவிலான சரிவுகளை எதிர்கொண்டது. இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இதன் வாயிலாக அக்டோபர் 29ஆம் தேதி 163.85 ரூபாயில் இருந்து இன்று வரை தொடர் வளர்ச்சிப் பாதையில் இந்நிறுவனப் பங்குகள் 206.20 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 25 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

ஐடிசி சிகரெட் நிறுவனம் மட்டுமல்ல

ஐடிசி சிகரெட் நிறுவனம் மட்டுமல்ல

ஐடிசி நிறுவனத்திற்குப் பெரும் பகுதியிலான வருமானம் மற்றும் லாபம் சிகரெட் வர்த்தகத்தின் மூலமாக மட்டுமே கிடைத்தாலும் இந்நிறுவனம் உணவுப் பொருட்கள், பர்சனல் கேர், ஸ்டேஷ்னரி, தீப்பெட்டி, அகர்பத்தி, ஹோட்டல்ஸ், பேப்பர் போர்டு, பேகேஜிங் மற்றும் பிரின்டிங், ஐடி, பால் பொருட்கள் எனப் பல துறையில் வர்த்தகம் செய்து வருகிறது.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

அக்டோபர் 30 முதல் இன்று வரையில் ஐடிசி நிறுவனப் பங்குகள் சுமார் 25 சதவீத வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சக போட்டி நிறுவனமான பிரிட்டானியா பங்குகள் 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் மாரிக்கோ லிமிடெட் 12 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் டாபர் இந்தியா இக்காலகட்டத்தில் 2 சதவீதம் சரிவை எதிர்கொண்டுள்ளது.

சிகரெட் வருவாய்

சிகரெட் வருவாய்

செப்டம்பர் காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் முக்கிய மற்றும் பெரும் வர்த்தகப் பிரிவான சிகரெட வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய் அளவு 3.9 சதவீதம் வரையில் சரிவடைந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் சமுக வலைத்தளத்தில் இந்நிறுவனத்தைக் கடுமையாகக் கிண்டல் செய்தனர்.

இதேபோல் இக்காலகட்டத்தில் ஹோட்டல் மூலம் கிடைக்கும் வருவாய் அளவுகளும் 1 சதவீதம் வரையில் சரிந்தது.

வியாழக்கிழமை வர்த்தகம்

வியாழக்கிழமை வர்த்தகம்

புதன்கிழமை வர்த்தக முடிவில் ஐடிசி நிறுவனப் பங்குகள் 205.40 ரூபாய்க்கு முடிவடைந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி பங்குகள் 1.35 ரூபாய் உயர்ந்து 206.75 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+