இந்தியாவின் முன்ணணி நிறுவனங்களில் ஓன்றான ஐடிசி பங்குதாரர்கள், ஹோட்டல் வணிகத்தைத் தனி நிறுவனமாகப் பிரிக்கும் முக்கியமான Demerger திட்டத்திற்கு ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பான்மையான பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற ITC பங்குதாரர்கள் கூட்டத்தில், 99.6% பங்குதாரர்கள் ஹோட்டல் வணிகத்தை ஐடிசி ஹோட்டல்ஸ் லிமிடெட் என்ற தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கான தீர்மானத்திற்குப் பச்சை கொடி காட்டியுள்ளனர்.

இந்த ஒப்புதலுடன், செபி உட்படப் பிற முக்கியமான ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதிகளைப் பெற்ற பிறகு, இந்த ஆண்டுக்குள் ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குச்சந்தையில் தனி நிறுவனமாக பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து நிதி சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரித்து பட்டியலிடப்பட்டதில் இருந்து பல நிறுவனங்கள் டிமெர்ஜர் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஐடிசி நிறுவனம் இந்த டிமெர்ஜர் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, ஐடிசி பங்குதாரர்கள் தங்கள் பங்குகளில் ஒவ்வொரு 10 பங்குகளுக்கும், பிரிக்கப்படும் ஹோட்டல் வணிகத்தில் 1 பங்கு வழங்கப்படும்.
அண்மையில், இந்திய போட்டித்திறன் ஆணையம் (CCI) ஹோட்டல் வணிகத்தைப் பிரிப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. ஹோட்டல் வணிகம் தனி நிறுவனமாகப் பட்டியலிடப்பட்ட பிறகு, ஐடிசி நிறுவனம் அதில் 40% பங்குகளை வைத்திருக்கும். மீதமுள்ள 60% பங்குகள் ஐடிசி பங்குதாரர்களுக்குக் கிடைக்கும்.
பங்கு வழங்கப்படும் விகிதம், இரு நிறுவனங்களின் பங்கு மூலதனம் அல்லது பங்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இது ஐடிசி ஹோட்டல்-ன் சந்தை மதிப்பீட்டை எந்த வகையிலும் பாதிக்காது.
இந்த ஹோட்டல் வர்த்தகத்தைத் தனி நிறுவனமாகப் பிரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐடிசி ஹோட்டல்ஸுக்கு "ஐடிசி" என்ற பிராண்ட் பெயரை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டாலும் இதற்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
புகையிலை முதல் நுகர்பொருள் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் இந்தப் பன்முக நிறுவனமான ஐடிசி, தனது ஹோட்டல் வணிகம் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் தனி நிறுவனமாக இயங்குவதற்குத் தயாராக இயங்கும் நம்பிக்கை இருக்கும் காரணத்தாலே தற்போது ஐடிசி-யில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸ் பிரிவு தனியாக பிரிகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications