இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான ஐடிசி நிறுவனத்தில் கடந்த வருடம் புதிதாக 39 ஊழியர்களின் வருடாந்திர சம்பளம் 1 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் மொத்த கோடீஸ்வர ஊழியர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தரவுகளை ஐடிசி நிறுவனம் தனது வருடாந்திர நிதி அறிக்கையில் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. அது சரி, ஐடிசி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் எத்தனை கோடீஸ்வர ஊழியர்கள் இருக்கிறார்கள் தெரியுமா..?!
இந்திய எப்எம்சிஜி துறை
இந்தியா, உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை என்பது அனைவருக்கும் தெரிந்த, அதேவேளையில் போட்டி மிகுந்த ஒரு சந்தையுமாகவே விளங்குகிறது. இந்திய எப்எம்சிஜி துறையில் இந்தப் போட்டி சற்று கூடுதலாகவே உள்ளது என்றால் மிகையில்லை. இந்தத் துறையில் இந்தியா முழுவதும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து, அதைத் தக்கவைப்பது என்பது மிகப்பெரிய சவால்.
எப்எம்சிஜி துறை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எப்எம்சிஜி துறை போட்டியில் வர்த்தகத்தைத் தொடர்ந்து அதிகரித்து வளர்ச்சி தக்க வைக்கும் ஊழியர்களுக்குத் தான் அதிகளவிலான சம்பளம் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எப்எமசிஜி துறையில் இருக்கும் டாப் நிறுவனங்கள் கோடீஸ்வர ஊழியர்களை உருவாக்கி வருகிறது.
கோடீஸ்வர ஊழியர்கள்
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஐடிசி நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின் படி புதிதாக 39 கோடீஸ்வர ஊழியர்களை உருவாக்கப்பட்ட உள்ள நிலையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் கோடீஸ்வர ஊழியர்களின் எண்ணிக்கை 129ல் இருந்து 123 ஆகக் குறைந்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் என்ன ஆனது..?!
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த வருடம் GSK நிறுவனத்தைப் பெரும் தொகைக்குக் கைப்பற்றிச் சுமார் 3500 ஊழியர்களையும், அதன் வர்த்தகத்தையும் கைப்பற்றியது. இந்தக் கைப்பற்றலில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் 21 உயர் அதிகாரிகளும் இருந்தனர், ஆனாலும் கோடீஸ்வர ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் Vs ஐடிசி
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் FMCG பிரிவில் மட்டுமே இருக்கும் நிலையில், ஐடிசி நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக உள்ளது பல பிரிவுகளில் பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
ஜிடிசி வர்த்தகம்
உதாரணமாக ஜிடிசி சிகரெட்-ல் துவங்கி உணவு பொருட்கள், அழகு பொருட்கள், நோட்டுப் புத்தகம், தீப்பெட்டி, அகர்பத்தி, ஹோட்டல் வர்த்தகம், பேப்பர் தொழிற்சாலை, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வர்த்தகம் என நிறைய உள்ளது.
ஐடிசி நிர்வாகக் கட்டமைப்பு
இப்படி ஐடிசி நிறுவனம் செய்யும் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிஇஓ மற்றும் உயர்மட்ட நிர்வாகக் குழு உள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனத்தை இந்த முறையில் தான் கட்டமைத்து நிர்வாகம் செய்ய முடியும்.
FMCG பிரிவு கோடீஸ்வர ஊழியர்கள்
இந்த வகையில் FMCG நிறுவனத்தை மட்டும் தனியாகப் பிரித்தால் ஐடிசி நிறுவனத்தில் 96 உயர் அதிகாரிகள் மட்டுமே 1 கோடி ரூபாய்க்கும் அதிகச் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் இதன் எண்ணிக்கை 123 ஆக உள்ளது.
சஞ்சீவ் பூரி சம்பளம்
மேலும் 2021ஆம் நிதியாண்டில் ஐடிசி நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளம் சராசரியாக 51 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான சஞ்சீவ் பூரி-யின் சம்பளம் 47 சதவீதம் அதிகரித்து 11.95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சஞ்சீவ் மேத்தா சம்பளம்
இதேவேளையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் மேத்தா-வின் சம்பளம் 21 சதவீதம் சரிந்து 15.36 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தை ஒரு சிஇஓ பேக்டரி எனவும் அழைப்பது உண்டு, இந்நிறுவனத்திலிருந்து சுமார் 400 சிஇஓ உருவாக்கப்பட்டு உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications