இந்தியாவின் மிகப் பெரிய எஃப் எம் சி ஜி நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி தன் மார்ச் 2020 காலாண்டு முடிவுகளை, நேற்று 26 ஜூன் 2020 வெள்ளிக் கிழமை அன்று வெளியிட்டு இருக்கிறது.

ஐடிசிக்கு அதிக வருமானத்தைக் கொட்டிக் கொடுக்கும் வியாபாரம் சிகரெட் தான். ஆக சிகரெட் வியாபாரத்தில் இருந்து மார்ச் 2020 காலாண்டில் 5,130 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறதாம். இது கடந்த மார்ச் 2019 காலாண்டில் ஈட்டிய 5,485 கோடி ரூபாயை விட குறைவு.
ஐடிசி கம்பெனியின் நிகர லாபம், கடந்த மார்ச் 2019-ல் 3,481 கோடி ரூபாயாக இருந்து இருக்கிறது. ஆனால் இந்த மார்ச் 2020 காலாண்டில் 3,797 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இந்த லாப அதிகரிப்புக்கு, மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு ஒரு மிகப் பெரிய காரணம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஐடிசி நிறுவனத்தின் ஹோட்டல் வியாபாரம் வழியாக வரும் வருவாயும், கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 8.6 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். 2019 - 20 நிதி ஆண்டின் முதல் 3 காலாண்டில் ஐடிசி ஹோட்டல் வழியாக வரும் வருவாய் நன்றாக அதிகரித்து வந்தது எனவும் ஐடிசி தரப்பே சொல்லி இருக்கிறார்களாம். கொரோனா வைரஸ் பிரச்சனையால், ஹோட்டல் வியாபாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐடிசி நிறுவனமே சொல்லி இருக்கிறது.
ஐடிசி கம்பெனியின் செயல்பாடுகளில் இருந்து வரும் வருவாய் (Operating Revenue), இந்த மார்ச் 2020 காலாண்டைல், கடந்த ஆண்டை விட 6.4 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம்.
ஐடிசி நிறுவனத்தின் Earnings before interest, tax, depreciation and amortisation (EBITDA) மார்ஜின், சந்தை கணித்து இருந்ததை விட அதிகமாகவே வந்திருக்கிறதாம். ஐடிசியின் 38.4 சதவிகிதமாக இருக்கிறதாம்.
ஆனால் ஐடிசி பங்கு விலை, காலாண்டு தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு ஒன்றும் பெரிய மாற்றங்களைக் காட்டவில்லை. இந்த செய்திகள் வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பின், மீண்டும் பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கும் என்பதால், இனி, இந்த காலாண்டு செய்தி, பங்கு விலையில் எதிரொலிக்குமா என்பதும் சந்தேகமே!


Click it and Unblock the Notifications