லாபத்தில் 20% வீழ்ச்சி.. 3,232 கோடி லாபம் கண்ட ஐடிசி.. !

மும்பை: சிகரெட் முதல் ஹோட்டல் வரையிலான வர்த்தகத்தில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வரும் ஐடிசி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த நிகரலாபம் 19.65 சதவீதம் குறைந்து, 3,232.40 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4,023.10 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபத்தில் 20% வீழ்ச்சி.. 3,232 கோடி லாபம் கண்ட ஐடிசி.. !

இதே இடி நடத்திய ஆய்வின் படி லாபம் 3,522 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐடிசி செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய், 0.1% அதிகரித்து 11,976.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 11,871.47 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் சிகரெட் வர்த்தகத்தில் மொத்த வருவாய் 5,121.30 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 5,326.83 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இதே எப்எம்சிஜி துறையில் 3,794.95 கோடி ரூபாயாக வருவாய் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,288.31 கோடி ரூபாயாக இருந்தது.

இதே ஹோட்டல் வணிகத்தில் இதன் வருவாய் 81.96 கோடி ரூபாயாக பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 426.63 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே அக்ரி வணிகத்தில் வருவாய் 2,985.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,647.52 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 0.49% குறைந்து 173.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே சென்செக்ஸ் 1.34% அதிகரித்து 41,893 ஆகவும் முடிவடைந்துள்ளது.

நடப்பு ஆண்டில் கொரோனா தாக்கம் காரணமாக இதன் வணிகங்களில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிகரெட் வணிகத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதோடு ஹோட்டல் வணிகத்திலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவே லாபம் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சிகரெட் விற்பனை வெகுவாக சரிந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் மற்ற துறைகளில் சற்று வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது, பலத்த வீழ்ச்சியினை தடுத்துள்ளது. எப்படி இருப்பினும், தற்போது லாக்டவுன் தளர்வினால் அதன் ஹோட்டல் வணிகம் வளர்ச்சி காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்து வரும் காலாண்டு முடிவுகளில் இன்னும் சாதகமான வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+