ரூ.1 கோடி சம்பளத்துக்கு புதிதாக 68 பேரை பணியில் அமர்த்திய ஐடிசி..!

இந்தியாவின் புகழ்பெற்ற FMCG நிறுவனமான ஐடிசி 2024 ஆம் நிதி ஆண்டில் 1 கோடி ரூபாய் ஊதிய தொகுப்பில் சுமார் 68 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது. ஐடிசி நிறுவனத்தின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான ஆண்டு நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ஐடிசி நிறுவனம் 350 ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளது. இவர்களுக்கு 102 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு இருக்கிறது, அதாவது மாதத்திற்கு சுமார் 8.5 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி சம்பளத்துக்கு புதிதாக 68 பேரை பணியில் அமர்த்திய ஐடிசி..!

2023 ஆம் நிதி ஆண்டில் 282 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தை பெற்றிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 350 என உயர்ந்துள்ளது.

ஐடிசி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2023 ஆம் நிதி ஆண்டை விட 2024 ஆம் நிதி ஆண்டில் 3.5 சதவீதம் அதிகரித்து 24,567 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. அதேபோல சராசரியாக ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனர்களுக்கு 60% என்ற அளவில் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் து ஆண் உயர் அதிகாரிகளின் சராசரி மாதச் சம்பளம் 1.11 லட்சம் ஆகவும் , பெண் தலைமை நிர்வாகிகளின் சராசரி சம்பளம் 1.07 லட்சமாகவும் உள்ளது.

இங்கே ஆண் ஊழியர்களின் சராசரி சம்பளம் 7. 14 லட்சம் ரூபாயாகவும், பெண் ஊழியர்களின் சராசரி சம்பளம் 7.03 இலட்சமாகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த ஊதியத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும்.

இதனிடையே ஐடிசி நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும் தலைவருமான சஞ்சீவ் பூரி, 2024 ஆம் நிதியாண்டில் 28.62 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகம்.

அதேபோல் ஐடிசி நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சுமந்த் 13.6 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று இருக்கிறார். இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52% அதிகமாகும் . அதே போல மற்ற தலைமை நிர்வாகிகளும் 30 முதல் 50 சதவீதம் வரை ஊதிய உயர்வினை பெற்றுள்ளனர்.

தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 200 முதல் 300 சதவீதம் வரை போனஸும் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வழங்கப்படுகிறது. 2024 ஆம் நிதி ஆண்டு இந்த நிறுவனத்தின் வருமானம் 69,446 கோடி ரூபாய் ஆகும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+