இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசி-யின் பங்குகள், மத்திய அரசின் புகையிலை பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதித்ததால் 6 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது. இந்த வரி விதிப்பு ஐடிசி உட்பட அனைத்து சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் எதிரொலியாக பிஎஸ்இயில் ஐடிசி பங்குகள் 9.8 சதவீதம் சரிந்து, 2020க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது, இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி வர்த்தக முடிவில் ஒரு பங்கு விலை 363.95 ரூபாய்க்கு முடிந்தது. அதிகப்படியாக 362.70 ரூபாய்க்கு சரிந்தது.

அதேபோல, காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்குகள் 18.5 சதவீதம் வரையில் குறைந்தது. இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி வர்த்தக முடிவில் ஒரு பங்கு விலை 2,288.00 ரூபாய்க்கு முடிந்தது. அதிகப்படியாக 2230.30 ரூபாய்க்கு சரிந்தது.
ஐடிசி நிறுவனம் கிளாசிக், கோல்ட் ஃப்ளேக் போன்ற பிராண்டுகளை விற்கிறது, காட்ஃப்ரே மார்ல்போரோ, ஃபோர் ஸ்கொயர் போன்றவற்றை விற்பனை செய்கிறது.
வரி உயர்வின் முழு விபரம்
பிப்ரவரி 1, 2026 முதல் 1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கலால் வரி விதிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள 40 சதவீத ஜிஎஸ்டிக்கு மேல் விதிக்கப்படும் ஒரு வரி. சிகரெட்-ஐ தொடர்ந்து பான் மசாலா மீது ஹெல்த் அண்ட் நேஷனல் செக்யூரிட்டி செஸ் விதிக்கப்படும். பீடிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்படும்.
இந்த புதிய வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பு மத்திய அரசு காபென்ஷேசன் செஸ் வரியை நீக்கியது. இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைத்த போது 4 வரி அடுக்குகளை 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டது.
அப்போது புகையிலை, ஆடம்பர பொருட்கள் போன்ற சின் கூட்ஸுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 40 சதவீத அடுக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது இதன் மீது தான் கலால் வரி மற்றும் ஹெல்த் அண்ட் நேஷனல் செக்யூரிட்டி செஸ் விதிக்கப்படுகிறது.
மேலும் ஒரு சிகரெட் விலை எந்த அளவுக்கு உயர்கிறது என்பதை இனி வரும் நாட்களில் தான் ஐடிசி, காட்ஃப்ரே நிறுவனங்களை பாதிக்கும்.
நிறுவனங்களின் மீது தாக்கம்
ஐடிசி நிறுவனத்தின் மொத்த வருவாயில் சிகரெட் விற்பனையிலிருந்து 40 சதவீதத்திற்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. இந்த வரி உயர்வால் விலையை குறைந்தபட்சம் 15 சதவீதம் உயர்த்த வேண்டியிருக்கும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது. விலை அதிகரிக்கும் போது விற்பனை குறையும், இதனால் வருவாய், லாப அளவீடுகள் அனைத்தும் குறையும். இது தான் ஐடிசி மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்குகள் சரிவுக்கு காரணமாக உள்ளது.
ஐடிசியின் பெரிய பங்குதாரரான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாகோ பிஎல்சி, நிறுவனத்தில் தனது பங்குகளை படிப்படியாக விற்று வருகிறது. மே 2025 இல் 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்று, தனது உரிமையை 22.91 சதவீதமாக குறைத்தது. இதுவும் ஐடிசி பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கி வருகிறது.
இந்தியாவில் 25.3 கோடி மக்கள் புகையிலை பயன்படுத்தி வருகிறார்கள், இது உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். இந்த நிலையில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களில் செய்யப்படும் சிறிய மாற்றமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றிய ஜிஎஸ்டி 2017ல் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வந்ததை தொடர்ந்து, செப்டம்பர் 2025ல் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதில் சோப்புகள் முதல் சிறு கார்கள் வரை பல பொருட்களுக்கு வரி குறைந்தது. இழப்பீட்டு செஸ் நீக்கப்பட்டு, புகையிலை போன்ற பொருட்களுக்கு உயர் கலால் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
டிசம்பரில் நாடாளுமன்றம் இது தொடர்பான இரு மசோதாக்களை அங்கீகரித்தது, பிப்ரவரி 1, 2026 முதல் அமலாக்கம் அறிவிக்கப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications