2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், சிக்ரெட் விற்பனை மீது புதிய கட்டுப்பாடுகளும், கூடுதல் வரியும் விதிக்கப்படும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல், சிகரெட் விற்பனையில் முன்னணி நிறுவனமான ஐடிசி பங்குகள் மிகவும் மந்தமாக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பட்ஜெட் 2021 அறிக்கையில் வர்த்தகச் சந்தையைப் பாதிக்கும் எவ்விதமான அறிவிப்பும் இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் முடிந்த பின்பு மும்பை பங்குச்சந்தை தடாலடியாக 2500 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

இதேவேளையில் 204 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட ஐடிசி பங்குகள் தடாலடியாக 212 ரூபாய்க்கு உயர்ந்தது. மேலும் தொடர்ந்த வர்த்தக உயர்வின் மூலம் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் ஐடிசி பங்குகள் அதிகப்படியாக 6.54 சதவீதம் வரையில் உயர்ந்து 216.55 ரூபாயாக உயர்ந்தது.
ஐடிசி பங்குகளைப் போல் சிகரெட் விற்பனையில் இருக்கும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் 2.43 சதவீதமும், கோல்டன் டோபேக்கோ 3.07 சதவீதமும், காட்ப்ரி பிலிப்ஸ்1.12 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது.
கொரோனா தாக்கம் மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைச் சரி செய்ய மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சிகரெட் மீது அதிக வரி விதிக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. இதேபோல் சிகரெட் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வயது வரம்பை 18ல் இருந்து 21ஆக உயர்த்தப்படும் என்றும் கணிப்புகள் வெளியானது.
ஆனால் கணிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்தப் பட்ஜெட் அறிக்கை உடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications