தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இணைந்து இந்த வார துவக்கத்தில் தமிழ்நாடு டெக்னாலஜி ஹப் எனப்படும் iTNT Hub திறந்து வைக்கப்பட்டது.
இந்த iTNT Hub தான் தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ள AI Mission-க்கு அடித்தளமாக விளங்கப்போகிறது. உலகமே செயற்கை நுண்ணறிவு துறை பக்கம் சென்றுக்கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு அரசு முன்னோடியாக செயற்கை நுண்ணறிவு துறையில் இறங்க திட்டமிட்டு உள்ளது.

2022 பட்ஜெட் அறிக்கையில் தமிழ்நாடு அரசு iTNT Hub-ஐ அமைக்கும் என்றும் இதற்கு 54.6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. iTNT Hub ஏற்கனவே ஸ்பேஸ் டெக், ஹெல்த் டெக் என பல துறைகளை சேர்ந்த 19 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
iTNT Hub மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பிளாக் செயின் ஆகிய தொழில்நுட்பத்தில் பணியாற்றவும், விரிவாக்கம் செய்யவும் உதவும். iTNT Hub போல் இந்தியாலில் இதுவரையில் எந்த ஒரு மாநில அரசும் உருவாக்கியது இல்லை, iTNT Hub மூலம் தமிழ்நாட்டை உலகளவில் top 10 innovation economies என்ற நிலைக்கு உயர்த்தும் பாதையை உருவாக்கப்பட்டு உள்ளது.
iTNT Hub அமைக்க 50 சதவீத நிதியை மத்திய அரசும், 37 சதவீத தொகையை மாநில அரசும் 13 சதவீத தொகையை கார்பரேட் நிறுவனங்களும் முதலீடு செய்து உருவாக்கப்பட்டு உள்ளது.
iTNT Hub-ன் சிஇஓ-வான விஜய் ஆனந்த் கூறுகையில் தமிழ்நாடு அரசின் AI Mission-ல் முக்கியமான மாநிலத்தின் e-Governance Agency-க்கு அடித்தளமாக இருக்க போகிறது. 3 வருட திட்டத்தின் கீழ் 8 முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 முக்கிய பிரிவுகளில் டேட்டா எக்ஸ்சேஞ்ச் பிளாட்பார்ம், அரசு அமைப்புகளில் AI பயன்பாடு, திறமைகளை உருவாக்குதல்,R&D, ஸ்டார்ட்அப், ஃபண்டிங் கம்யூனிட்டி என்கேஜ்மென்ட், high performance computing ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளார்.
iTNT Hub மூலம் தமிழ்நாடு அரசு அனைத்து முக்கியமான பிரிவிலும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பிளாக் செயின் ஆகிய தொழில்நுட்பத்தை உட்புகுத்த போகிறது. இந்த 3 தொழில்நுட்பம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது என பேசப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு அரசு இதில் முன்னோடியாக இருப்பது மாஸ் ஆன விஷயம்.. நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க..
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications