சம்பளதாரர்களே ஆன்லைன் போர்ட்டல் ரெடி!! வருமான வரி கணக்கு தாக்கலை தொடங்கலாம்!!

டெல்லி: இந்தியாவில் ஜூன் ,ஜூலை மாதங்கள் வந்துவிட்டாலே சம்பளதாரர்கள் பரபரப்பாகிவிடுவார்கள். ஏனெனில் இது வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான மாதங்களாக இருக்கின்றன. எப்போதும் ஜூலை 31ஆம் தேதி தான் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இருக்கும். இந்த ஆண்டு வருமானவரி துறை, FY 2024-25க்கான வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 15ஆம் தேதியை நிர்ணயம் செய்திருக்கிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் இணையதளத்திலும் வருமான வரி படிவங்களிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்ததை அடுத்து இந்த ஆண்டு வருமான வரி கணக்கு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஐடிஆர் 1 ( ITR-1 ) மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்களை பயன்படுத்துவோர் ஆன்லைன் வழியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அனுமதி தற்போது தரப்பட்டுள்ளது.

சம்பளதாரர்களே ஆன்லைன் போர்ட்டல் ரெடி!! வருமான வரி கணக்கு தாக்கலை தொடங்கலாம்!!

எனவே இந்த படிவங்கள் மூலம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய E-Filing ஐ தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் வருமான வரித்துறை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகியவற்றிற்கான எக்செஸ் யூட்டிலிட்டி படிவங்களை வெளியீடு செய்தது. இந்த முறை வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதை மேலும் எளிமையாக்க வேண்டும் என்பதற்காகவும் Prefilled முறையில் ஏற்கனவே சில தரவுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் ஐடிஆர் -1 படிவத்தை பயன்படுத்தலாம்?

· இந்தியாவை சேர்ந்த தனிநபர்கள் ஆண்டு வருமானம் 50 லட்சத்திற்குள் இருப்பவர்கள்

· ஒரு நிறுவனத்தில் வேலை செய்து ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள்

· ஒரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறக்கூடியவர்கள், ஆண்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வேளாண்மை வருமானம் பெறுபவர்கள்

· சேமிப்பு கணக்கிலிருந்து வட்டி வருமானம் ,வங்கி டெபாசிட்களில் இருந்து வட்டி வருமானம் பெறுபவர்கள்

· வருமான வரி ரீஃபண்டில் இருந்து வட்டி வருமானம் பெறுபவர்கள்

· வாழ்க்கை துணை மற்றும் வீட்டிலிருக்கும் சிறாரின் வருமானத்தையும் தன்னுடைய வருமானத்தின் கீழ் ஒருங்கிணைத்து கணக்கு தாக்கல் செய்பவர்கள்

வணிகத்தில் ஈடுபடுபவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தி வருமானத்தை தாக்கல் செய்ய முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வருமானம் பெறுபவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்த முடியாது.

யாரெல்லாம் ஐடிஆர் - 4 படிவத்தை பயன்படுத்தலாம்?

· தனிநபர்கள்,பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்கள் (LLPகள் தவிர)

· வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் presumptive taxation திட்டத்தின் கீழ் 44AD, 44ADA, 44AE ஆகிய பிரிவுகளில் வருமானத்தை கணக்கு காட்டுபவர்கள்

· Freelancer, Content creator, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் இந்த பிரிவினை பயன்படுத்தலாம்

· இந்த படிவத்தையும் ஆண்டு வருமானம் 50 லட்சத்திற்குள் மட்டும் இருப்பவர்களே பயன்படுத்த முடியும்.

லாட்டரியில் இருந்து பரிசு வென்றவர்கள், நிறுவனங்களில் இயக்குநர்களாக இருப்பவர்கள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பவர்கள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் இந்த படிவங்களை பயன்படுத்த முடியாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+