செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. சிலிண்டர் விலை தொடங்கி நம் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களும் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி என பல முக்கியமான தேதிகளும் கொண்ட மாதமாக செப்டம்பர் இருக்கிறது.
வருமான வரி கணக்கு: சம்பளதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாள். வழக்கமாக ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் . ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு செப்டம்பர் 15ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. எனவே சம்பளதாரர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் வருமான வரியை தாக்கல் செய்வது சிறந்தது.

ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து யூபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு எந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய போகிறோம் என்பதை செப்டம்பர் 30க்குள் முடிவு செய்தாக வேண்டும்.
வெள்ளிக்கு ஹால்மார்க்: இந்தியாவில் தங்கத்திற்கும் தங்க நகைகளுக்கும் எப்படி அரசு ஹால்மார்க் என்பதை கட்டாயம் ஆக்கி இருக்கிறதோ , அதேபோல வெள்ளிக்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கி இருக்கிறது., செப்டம்பர் 1 முதல் வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் என்பது கட்டாயம். எனவே மக்கள் வெள்ளி வாங்கும் போது ஹால்மார்க் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது அவசியம். இது தான் வெள்ளியின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துகிறது. வெள்ளி வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த மாற்றத்தை தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்குவது நல்லது.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும் . சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை மாற்றம் என்பது இருக்கும். சிலிண்டர் விலை உயரவும் செய்யலாம் அல்லது விலை குறையவும் வாய்ப்புள்ளது. சில சமயம் விலை மாற்றமில்லாமலும் போகலாம். எனவே செப்டம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
எஃப்டி திட்டங்கள்: இந்திய வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் வழங்கும் சிறப்பு எஃப்டி திட்டங்களும் இந்த மாதத்துடன் முடிகின்றன., இந்திய வங்கி வழங்கும் 444 நாட்கள், மற்றும் 555 நாட்கள் எஃப்டி திட்டங்களில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும். ஐடிபிஐ வங்கியின் சிறப்பு டெபாசிட் திட்டம் 444, 555 மற்றும் 700 நாட்கள் திட்டங்களில் செப்டம்பர் 30க்குள் முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications