நம் நாட்டில் வரி செலுத்துவோர் அனைவரும் ITR தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். இதற்காக வருமானவரித்துறையினர் முன்கூட்டியே ஐடிஆர் படிவங்களை ரிலீஸ் செய்துள்ளனர். முக்கியமாக வரி செலுத்துவதற்கு நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆண்டு சற்று சீக்கிரமே படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. எனவே டெட் லைன் தேதி முடியும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே செயல்படுவது நல்லது.
ஐடிஆர் தாக்கல் செய்தவுடன் உங்களுடைய கடமை முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். அதன் பிறகு தான் முக்கிய வேலையே இருக்கிறது. அதுதான் இ-வெரிஃபிகேஷன். நீங்கள் வரி தாக்கல் செய்த பிறகும் இ-வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிக்கவில்லை என்றால் வருமான வரித் துறை உங்களுடைய வரித் தாக்கலை செல்லாததாக அறிவிக்கும்.
எப்போது இ-வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்?: நீங்கள் உங்கள் ஐடிஆர்-ஐ ஆன்லைனில் சப்மிட் செய்த பிறகு அதிலிருந்து 30 நாட்கள் இதற்கு டைம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த செயல்முறையை முடித்தால் போதுமானது. ஒருவேளை நீங்கள் இதை செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள் மற்றும் ITR ப்ராசஸ் செய்வதிலும் பிரச்சனை ஏற்படும்.

ஏன் இந்த இ-வெரிஃபிகேஷன்?: ஆன்லைனில் ஐடிஆர் சமர்ப்பிக்கப்பட்டதும்.. வருமான வரித்துறை, உண்மையிலேயே அந்தந்த வரி செலுத்துவோர் தான் ஐடிஆர் ஃபைலிங் செய்தனரா? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறது. இ-வெரிஃபிகேஷன் என்பது ஒன்றும் பெரிய செயல்முறை கிடையாது. வெறும் ஒரு டிஜிட்டல் கையொப்பம் மட்டுமே. இதை ஒரு சில நிமிடங்களில் ஆன்லைன் மூலமாகவே செய்து முடிக்கலாம்.
ஆனால் இந்த சிம்பிள் ப்ராசஸை செய்யத் தவறினால் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம். நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆர் செல்லாததாக கருதப்படும், உங்களுக்கு கிடைக்க வேண்டிய வரிச் சலுகைகள் மற்றும் வரிவிலக்குகள் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது. ரீஃபண்ட் பெறுவதில் சில தாமதங்கள் ஏற்படலாம். அதோடு மிக முக்கியமாக வருமானவரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
முன்பெல்லாம் ITR தாக்கல் செய்த பிறகு ITR-V ஃபார்மை பிரிண்ட் அவுட் எடுத்து பெங்களூரில் இருக்கும் CPC-க்கு போஸ்டில் அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. இப்போது இந்த தொல்லை இல்லை. ஒரு சில நிமிடங்களில் ஆன்லைன் மூலமாக வெரிஃபை செய்யலாம்.
ஆன்லைனில் இ-வெரிஃபிகேஷன் செய்வது எப்படி?: நீங்கள் வருமானவரித் துறையின் இ ஃபைலிங் போர்ட்டலில் ரெஜிஸ்டர் செய்த யூசராக இருக்க வேண்டும். உங்களிடம் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு இருக்க வேண்டும். போர்ட்டலில் லாகின் செய்யாமல் வெரிஃபை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு உங்களிடம் அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்க வேண்டும்.
இ-வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிப்பதற்கு வருமானவரித் துறையினர் நான்கு ஆப்ஷன்களை வழங்கியுள்ளனர். OTP அடிப்படையிலான இ-வெரிஃபிகேஷன், பேங்க் அக்கவுண்ட் அல்லது டீமேட் அக்கவுண்ட்களை பயன்படுத்தி செய்யப்படும் இ-வெரிஃபிகேஷன், நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் மூலமாக செய்யப்படும் இ-வெரிஃபிகேஷன். இதில் எது உங்களுக்கு எளிதாக தோன்றுகிறதோ அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
ஆதார் அடிப்படையிலான இ-வெரிஃபிகேஷன்:
ஸ்டெப் 1: முதலில் வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழையுங்கள்.
ஸ்டெப் 2: பிறகு e-File → Income Tax Returns → e-Verify Return என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
ஸ்டெப் 3: பெண்டிங் ரிட்டன் என்பதைத் தேர்ந்தெடுத்து இ-வெரிஃபை என்பதில் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 4: அடுத்ததாக "Generate Aadhaar OTP" என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: பிறகு டிக்ளரேஷன் பாக்ஸில் கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து "Continue" என்பதை கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆதார் நம்பருக்கு வந்திருக்கும் 6 டிஜிட் ஓடிபி நம்பரை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 6: இறுதியாக "வெரிஃபை" என்பதைக் கிளிக் செய்தால் வேலை முடிந்தது. உடனே திரையில் ட்ரான்ஷாக்ஷன் ஐடி காண்பிக்கப்படும். இதில் மற்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்தியும் நீங்கள் இ-வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications