வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், காலக்கெடுவுக்குப் பிறகு ITR தாக்கல் செய்பவர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்பதை தனிநபர்கள் அறிந்திருக்க வேண்டும். 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். தனிநபர்கள் ஜூலை 31 காலக்கெடுவைத் தவறவிட்டால், அவர்கள் டிசம்பர் 31, 2024-க்குள் தாமதமாகத் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
பின் விளைவுகளில் இருந்து தப்பிக்க வருமான வரித்துறை குறிப்பிட்ட இந்த காலக்கெடுவுக்குள் ITR தாக்கல் செய்வது முக்கியமாகும். அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் பிஸியாக ஓடிக் கொண்டிருப்பதால், சில நேரங்களில் இந்த காலக்கெடு மறந்து போகலாம். சிலர் அதனைத் தவற விடலாம். எனவே உங்கள் மொபைல் போனில் ரிமைண்டர் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தி ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

ஜூலை 31-ஆம் தேதியை தவற விடுபவர்கள், அதே மதிப்பீட்டு ஆண்டின் படி, அதாவது 2024 முதல் 2005 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் ITR தாக்கல் செய்யலாம். இதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் கூட, விதிகளுக்கு இணங்காமல் அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதை விட தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வது சிறந்தது.
புதிய வரி முறை: வருமான வரியைக் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யத் தவறினால், நீங்கள் தானாகவே புதிய வரி விதிமுறைக்குள் கொண்டுவரப்படுவீர்கள். அந்த நிதியாண்டுக்கான பழைய வரி விதிமுறையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை இழப்பீர்கள். தாமதமாக ITR தாக்கல் செய்வது, ஒரு நபரை புதிய வரி விதிமுறைக்குள் கொண்டுவரும்.
வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி முறையைத் தேர்வு செய்யும் உரிமை வரி செலுத்துவோருக்கு உண்டு. வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த காலக்கெடுவுக்கு மேல் வருமான வரி செலுத்தும் போது தாமாக தேர்வு செய்யவும் வரி முறையில் பிரச்சனை ஏற்படலாம்.
2023 முதல் 2024 நிதியாண்டில், ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிலுவைத் தேதிக்குள் உங்கள் ITR-ஐத் தாக்கல் செய்யத் தவறினால், தாமதமாக ITR தாக்கல் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F-இன் படி, தாமதமாக தாக்கல் செய்வதற்கு கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், தாமதமாக ITR தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செக்சன் 271H இன் கீழ் அபராதம்: பிரிவு 234E இன் கீழ் தாமதமாக, குறிப்பிட்ட தேதிக்குள் TCS அல்லது TDS பைலிங் செய்ய முடியாத நபர்கள் ரூ. 10,000 முதல் ரூ. 1,00,000 வரை அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம்.
தேவையற்ற விளைவுகளை குறைப்பதற்கும் அபராதங்களில் இருந்து விடுபடவும், வருமானவரித்துறையின் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ITR தாக்கல் செய்வது சாலச்சிறந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications