ஜூன்- ஜூலை வந்துவிட்டாலே மாத சம்பளக்காரர்கள் அனைவரும் பரபரப்பாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் பணிகளைத் துவங்கிவிடுவார்கள். இந்த முறை வருமான வரி தாக்கல் செய்யும் ஈபைலிங் தளத்தில் 11க்கும் அதிகமாகத் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மக்கள் சமூகவலைத்தளத்தில் வருமான வரி துறையை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் இன்னும் சிலர் வருமான வரி தளத்தை உருவாக்கி இன்போசிஸ் மற்றும் அதன் நிறுவனர் நாராயண மூர்த்தியை டேக் செய்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான கடமை என்பதை உணர வேண்டும். மாத சம்பளக்காரர்கள் ஒரு நிதியாண்டில் ஈட்டிய வருமானத்தைக் கணக்கிட்டு உரிய காலக்கெடுவுக்குள், அரசு வரி செலுத்த வேண்டும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், தாமதமின்றி வருமான வரி தாக்கல் செய்வது உத்தமம்.
இதேவேளையில் வருமான வரித்துறையின், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடர்ந்து மெசேஜ் மூலம் மாத சம்பளக்காரர்களுக்கு நினைவூட்டி வருவது, பாராட்டத்தக்க விஷயமாகும்.
2023-24 நிதியாண்டுக்கான (கணக்கீட்டு ஆண்டு 2024-25) வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31, 2024 ஆகும். ஆனால் இந்த வருமான வரி அறிக்கையைத் தாமதமாகத் தாக்கல் செய்ய விரும்புபவர்கள் டிசம்பர் 31, 2024 வரை தாக்கல் செய்ய மத்திய வருமான வரி அனுமதிக்கிறது.
ஆனால், ஜூலை 31-க்கு பின்பு தாக்கல் செய்யும் போது அபராத தொகையுடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஜூலை 31-க்கு பின்பு தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான அபராதம் தொகையை தெரிந்துகொண்டு முன்கூட்டியே தாக்கல் செய்வது தான் சரியானதாக இருக்கும்.
தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் விதிக்கப்படும் அபராதம் ஒருவரின் வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். 2023-24 நிதியாண்டிற்கான (கணக்கீட்டு ஆண்டு 2024-25) நிகர வரி வருமானம் ரூ.5 லட்சத்தை விட அதிகமாக உள்ளவர்கள் தாமதமாகத் தாக்கல் செய்தால் அதிகபட்சமாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
நிகர வரி வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு குறைவாக உள்ளவர்களுக்கு தாமதமாக தாக்கல் செய்தால் அதிகபட்சமாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி விதிகள்படி அடிப்படை வரி விலக்கு வரம்பிற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், வரி ரீபண்ட் தொகையை திரும்பப் பெற வரி அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே கிடைக்கும். இப்பிரிவினர் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படமாட்டாது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications