இந்தியாவில் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்றார் போல் வரி செலுத்த வேண்டும். 2025-ஆம் நிதியாண்டில் சம்பாதித்த வருமானத்திற்கான வரியை 2025 முதல் 2026-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் கணக்கிட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும் கூட, சட்ட ரீதியாக எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க உரிய படிவங்களை சமர்ப்பிப்பதும், உங்களுடைய வருமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதும் முக்கியம்.
இந்தியாவில் குறிப்பிட்ட வருமான வரம்புக்கு குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு, வருமான வரிச் சட்டங்களின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ள ஒவ்வொரு தனிநபரும் வரி விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகத்தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட வருமான வரி வரம்புக்கு குறைவாக வருமானம் ஈட்டினாலும் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஏற்கனவே வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.
எனவே வருமான வரி தாக்கல் செய்து முழு தொகையையும் ரீபண்ட் பெறலாம். வரி வரம்புக்குள் வராதவர்கள்.. ஏன் வருமான வரி செலுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. ஏனெனில் ஒரு தனிநபர் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார்? எந்தெந்த ஆதாரங்களில் இருந்து அவருக்கு வருமானம் வருகிறது? என்ற தகவல்கள் அனைத்தும் அரசுக்கு தெரிந்தாக வேண்டும். இது ஒரு வெளிப்படையான அதே சமயத்தில் சட்டபூர்வமான செயல்முறையாகும்.
இந்தியாவில் உள்ள வருமான வரி சட்டத்தின் அடிப்படையில் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சில மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த விலக்கு அனைவருக்கும் பொருந்தாது. இந்தச் சலுகையைப் பயன்படுத்த சில குறிப்பிட்ட நிபந்தனைகளை மூத்த குடிமக்கள் செய்தாக வேண்டும்.
உதாரணமாக ஓய்வூதியம் பெறுபவர்கள், பிக்சட் டெபாசிட்களில் இருந்து வட்டி வருமானம் பெறுபவர்கள் போன்ற நபர்களுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வேறு எந்த வருமான ஆதாரம் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். உதாரணமாக சொத்து வாடகை, வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என எதன் மூலம் வருமானம் வருகிறதோ? அதற்கு ஏற்றார் போல் தகவல்களை வழங்கி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவேளை ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் போன்றவற்றை மட்டுமே வைத்திருந்தால் இந்த விலக்கை பெற மூத்த குடிமக்கள் தகுதியுடையவர்கள். ஆனால் அதற்கு வருமான வரித்துறை வழங்கியுள்ள 12BBA என்ற படிவத்தை பூர்த்தி செய்து ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் பெறும் அந்த வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தில் தங்களுடைய வருமானம் மற்றும் பிற விவரங்களை வழங்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பித்த பிறகு, மூத்த குடிமக்கள் தனியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இது போன்ற சலுகைகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் வெளிப்படுத்தும் விபரங்கள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் எதிர்காலத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.
இந்தியாவில் வருமான வரி தொடர்பான சட்டங்கள் மிகவும் முக்கியமான சட்டங்களாக பார்க்கப்படுகிறது. இதன்படி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும் கூட, சில தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். வரி கட்ட வேண்டியதில்லை என்று சட்டம் சொன்னாலும் நீங்கள் எங்கிருந்து வருமானப் பெறுகிறீர்கள்? என்னென்ன காரணங்களுக்காக வரி விலக்கு கேட்கிறீர்கள்? என்பதற்கான ஆவணங்கள் வருமானவரித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications