வரித் தாக்கல் 2026: ஜூலை மாதம் இந்த 3 டெட்லைனை மிஸ் பண்ணிடாதீங்க! இல்லன்னா ஃபைன் கட்டணும் பாஸ்!

ஒவ்வொரு நிதியாண்டிலும் ஜூலை மாதம் வரி செலுத்துவோர் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருப்பார்கள். இன்னும் ஜூலை பிறப்பதற்கு 2 நாட்களே உள்ள நிலையில் வரி தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடிப்பது நல்லது. அப்போது தான் அபராதம் மற்றும் வட்டி விதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அதோடு நீங்கள் வரி செலுத்தும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டாலும் அதை சரி செய்வதற்கு உங்களுக்கு போதிய கால அவகாசம் இருக்கும்.

நீங்கள் சம்பளம் பெறுபவராகவோ, தொழிலதிபராகவோ அல்லது உங்கள் நிறுவனத்தில் பலருக்கு வேலை வழங்கியவராகவோ இருந்தால் ஜூலை மாதத்தில் வரும் முக்கிய டெட் லைனை குறித்து வைத்திருப்பது நல்லது.

ஜூலை 7: TDS டெபாசிட் செய்வதற்கான காலக்கேடு இதுவாகும். வருமானவரிச் சட்டம் 2025-இன் கீழ் வரி மதிப்பீட்டு அதிகாரிகளால் ஒரு சிலருக்கு காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும். இப்படி அனுமதி வாங்கியவர்கள் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை டெபாசிட் செய்வதற்கு ஜூன் 7-ஆம் தேதி டெட்லைன். இந்த தேதியில் ஜூன் 2026-இல் முடிவடைந்த காலாண்டில் பெறப்பட்ட வரியை, வருமான வரித்துறை பரிந்துரைத்த படிவங்களைப் பயன்படுத்தி அப்லோட் செய்ய வேண்டும்.

வரித் தாக்கல் 2026: ஜூலை மாதம் இந்த 3 டெட்லைனை மிஸ் பண்ணிடாதீங்க! இல்லன்னா ஃபைன் கட்டணும் பாஸ்!

ஜூலை 30: மற்றொரு முக்கியமான டெட்லைன் இதுவாகும். குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் 2026-இல் பிடித்தம் செய்த செல்லான் மற்றும் அறிக்கை விவரங்களை ஜூலை 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நேரத்தில் பரபரப்பாக சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் தேவையின்றி அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கேற்ப முன்கூட்டியே தங்களுடைய ஆவணங்களை சரி பார்த்துக் கொள்வதும் நல்லது

ஜூலை 31: வரி செலுத்துவோருக்கு இந்தத் தேதியைப் பற்றி அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இதுவாகும். 2026 முதல் 2027-ஆம் மதிப்பீட்டாண்டின், வருமான வரி கணக்கை ITR 1 மற்றும் ITR 2 படிவங்களைப் பயன்படுத்தி வரித் தாக்கல் செய்யும் தனி நபர்களுக்கு இதுதான் கடைசி நாள்.

ஒரு சிலர் இன்று வேண்டாம் இன்னொரு நாள் டைம் இருக்கிறது என்ற எண்ணத்திலேயே ஜூலை 31-ஆம் தேதி வரை விட்டுவிடுவார்கள். நிபுணர்கள் வரி செலுத்துவோருக்கு கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்ற அறிவுரையையே தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

வரி செலுத்தும் பலர் சேர்ந்து ஒரே நாளை பயன்படுத்தினால் இணையதளத்தில் கண்டிப்பாக தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும். அந்த நேரத்தில் உங்களால் சரிவர ITR செலுத்த முடியாமலும் போகலாம். அப்போது இன்னும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட முன்கூட்டியே செயல்படுவது நல்லது. உங்கள் வரி தொடர்பான பணி.. அது என்னவாக இருந்தாலும் சரி டிடிஎஸ் டெபாசிட் செய்வது, ஐடிஆர் தாக்கல் செய்வது என எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேர காலக்கெடு வரை காத்திருக்காமல் முன்கூட்டியே செயல்படுவது நல்லது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+