வணிக நிறுவனங்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 ஆம் தேதி வரையில் மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை நீட்டித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிறுவனங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி அக்டோபர் 31 ஆகும்.

வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி தொடர்பான விஷயங்களை நிர்வாகம் செய்யும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிவிப்பில் கடந்த மாதம் தணிக்கை அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்ததால், தற்போது ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது என விளக்கியது
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வருமான வரி சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான இன்கம் ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31, 2022 கடைசி நாளாக இருந்த நிலையில் நவம்பர் 7, 2022 வரை நீட்டிக்கப்படுகிறது என் CBDT அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை அக்டோபர் 31, 2022க்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி அதாவது Due date நவம்பர் 30, 2022.
AMRG & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் மற்றும் சர்வதேச வரி பிரிவின் இயக்குநர் ஓம் ராஜ்புரோஹித் கூறுகையில், வணிக நிறுவனங்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 ஆம் தேதி வரையிலான நீட்டிப்புப் பண்டிகைக் காலத்தில் மிகவும் அவசியமானதாக உள்ளது. வரி விதிப்புகளில் எதிர்காலத்தில் ஏற்படும் முரண்பாடுகளைத் தடுக்க இது உதவும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications