டெல்லி: வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மே, ஜூன். ஜூலை மாதம் வந்துவிட்டாலே சம்பளதாரர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். இதற்கு காரணம் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். பொதுவாகவே இந்தியாவில் ஜூலை 31ஆம் தேதி தான் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாக இருக்கும். எந்த காரணம் கொண்டும் வருமான வரி துறை இதனை நீட்டிப்பது கிடையாது.
ஆனால் இந்த ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. வருமானவரித்துறை இந்த தகவலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது . அதில் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பு ஆவணமும் அந்த எக்ஸ் பதிவிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப கணக்கு தாக்கல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் சில காலம் தேவைப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைவரும் சுமூகமான முறையில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் எளிதாக்குவதற்காகவும் வெளிப்படை தன்மையை அதிகரிப்பதற்காகவும் 2025 -26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த திருத்தங்களுக்கு ஏற்ப வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்து பல்வேறு சோதனைகள் நடத்தப்படுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
கூடுதலாக மே 31 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் இருந்து கழிக்கப்படும் வரிகள் சம்பந்தப்பட்ட கணக்குகளில் ஜூன் தொடக்கத்தில்தான் பிரதிபலிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரணங்களாலேவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே சம்பளதாரர்கள் அவசரம் இன்றி முறையாக திட்டமிட்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications