வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கேடு முடிய உள்ள நிலையில், ஆன்லைனில் வரி செலுத்துவதற்கான இ-ஃபைலிங் போர்டலில் தற்பொழுது சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 அன்று முடிவடைகிறது. இதுபோன்ற புகார்களை வரி செலுத்துவோர் தெரிவிப்பது.. இது ஒன்றும் முதல் முறையல்ல. கடந்த ஆண்டும், ITR தாக்கல் செய்வதில் முரண்பாடுகள் இருந்ததாகவும், அதனால் தாமதம் ஏற்பட்டதாகவும், செய்திகள் வெளி வந்தன.
பெரும்பாலான வரி செலுத்துவோர் ஜூலை மாதத்தில் தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். மில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் இன்னும் ITR தாக்கல் செய்யாததால், இது ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் பலரும் ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31, 2024-க்கு மேல் ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது, வருமான வரி துறை இந்த குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த சிக்கலை தீர்ப்பதற்கு வேறு சில முயற்சிகளைக் கையாளுகின்றனர். அதுபோன்றே ஆதார் போர்ட்டலும் சிக்கல் இருப்பதாகவும் பயனர்கள் ஆதார் புதுப்பிப்புகளில், தாமதம் ஏற்படுவதாகவும், கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
வரி செலுத்துவோர் ITR தாக்கல் செய்யும் போது தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனம் (ICAI) IT துறைக்கு படிவம் 26AS/TIS/AIS மற்றும் ITR படிவங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சனைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.
IT துறைக்கு ICAI எழுதிய கடிதத்தில், பல சிக்கல்களை எடுத்துக்காட்டியுள்ளது. அவர்கள் சுட்டிக்காட்டிய சில முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. படிவம் 26AS/AIS/TISஐ பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்துள்ளன. அதன் அறிக்கையில் உள்ள சில புள்ளி விவரங்களிலும் முரண்பாடுகள் இருந்துள்ளன.
2. வருமான வரி போர்ட்டலில் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளது.
3. பூர்த்தி செய்யப்பட்ட டேட்டாக்களில் பிரச்சனை.
4. ITR தாக்கல் செய்யும் போது பிழைகள் ஏற்படுகிறது.
5. தாக்கல் செய்யப்பட்ட ITR ரசீதுகளைப் பதிவிறக்கும் செய்வதில் சிரமம் உள்ளது.
இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31க்கு அப்பால் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications