2023 முதல் 2024-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2024 ஆகும். வருமான வரி சட்டங்களின்படி வரி செலுத்துபவர்கள் ITR தாக்கல் செய்வதற்கு வெவ்வேறு காலக்கெடுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தாமதமாக ITR தாக்கல் செய்வது மற்றும் திருத்தப்பட்டு ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி தேதி அனைத்து வரி செலுத்துபவர்களுக்கும் டிசம்பர் 31 மட்டுமே. இந்தத் தேதியை தவறவிட்டால் வரி செலுத்துபவர்களுக்கு சில பின்விளைவுகள் ஏற்படலாம். அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
டிசம்பர் 31, 2024 அன்று தாமதமாக ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால் என்ன நடக்கும்?: ஒரு வரி செலுத்துபவர் தங்கள் அசல் ITR-ஐ தாக்கல் செய்யும் காலக்கெடுவைத் தவறவிட்டால் தாமதமாக ITR தாக்கல் செய்யலாம். இது வருமான வரி சட்டம் பிரிவு 139(4)-இன் கீழ் செய்யப்படுகிறது.

தாமதமாக வரி தாக்கல் செய்யும்போது 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு வேளை செலுத்த வேண்டிய வரித்தொகை நிலுவையில் இல்லாமல் இருந்தாலும், இந்த அபராதம் விதிக்கப்படும். வரிக்குட்பட்ட வருமானம் அதிகமாக இல்லை என்றால் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும். ஆனால் வரி விதிக்கக் கூடிய வருமானம் ரூ.3 லட்சம் ரூபாயை தாண்டவில்லை என்றால் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தாலும் அபராதம் விதிக்கப்படாது.
அசல் ITR-ஐ தாக்கல் செய்ய முடியாதவர்கள் தாமதமாக வருமானத்தை தாக்கல் செய்யலாம். ஆனால் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டிற்கு தாமதமாக ITR தாக்கல் செய்யும்போது ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வரி செலுத்துபவர் கண்டிப்பாக பழைய வரிமுறையை தேர்வு செய்ய முடியாது. பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்துபவருக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் டிடக்ஷன்கள் மற்றும் வரி விலக்குகளையும் கோரலாம். இதன் மூலம் வரி செலுத்துபவர் தங்கள் வரிக்குட்பட்ட வருமானத்தை குறைக்க முடியும். ஆனால் புதிய வரிமுறையின் கீழ் 2 டிடக்ஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன. வேறு எந்த டிடக்ஷனும் புதிய வரிமுறையின் கீழ் கோர முடியாது.
எத்தனை முறை திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்யலாம்?: திருத்தப்பட்ட ITR-ஐ எத்தனை முறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். இதற்கு வரம்பு இல்லை. ஆனால் வரி செலுத்துவோர் தேவையில்லாமல் திருத்தப்பட்ட ரிட்டன் தாக்கல் செய்வதை தவிர்த்துக் கொள்ளும்படி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அடிக்கடி திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்வது வருமானவரித் துறையின் ஆய்வுக்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது.
எந்த நேரத்தில் ITR தாக்கல் செய்ய வேண்டும்?: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான (AY 2024-25) திருத்தப்பட்ட ITR-ஐ டிசம்பர் 31, 2024 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம்.


Click it and Unblock the Notifications