நள்ளிரவில் வெளியான அறிவிப்பு!! வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தேதி நீட்டிப்பு!! ஆனா ஒரு டிவிஸ்ட்..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாள் என முதலில் அறிவிக்கப்பட்டது. வழக்கத்தை விட கூடுதலாக 45 நாட்கள் இந்த முறை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

ஏராளமான சம்பளதாரர்கள் கடைசி 3 நாட்களில் போட்டி போட்டுக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். குறிப்பாக கடைசி நாள் என்பதால் செப்டம்பர் 15ஆம் தேதி லட்சக்கணக்கானவர்கள் வருமான வரி கணக்கு இணையதளத்தை அணுகினர். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளமே முடங்கி போனது.

நள்ளிரவில் வெளியான அறிவிப்பு!! வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தேதி நீட்டிப்பு!! ஆனா ஒரு டிவிஸ்ட்..

வருமான வரி கணக்கு இணையதளம் சரியாக செயல்படவில்லை இதனால் வருமான வரி கணக்கு செய்ய முடியவில்லை என பலரும் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். எனவே கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் வருமானவரித் துறை ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டித்திருக்கிறது.

நள்ளிரவு 11.48 மணிக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் அவசரமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது .அதில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதி வரை என ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி ஏராளமானவர்கள் வருமானவரி கணக்கினை அவசர அவசரமாக தாக்கல் செய்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இணையதளம் முடங்கியதால் கணக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என கூறினர்.

வரி செலுத்துபவர்கள், பட்டைய கணக்காளர்கள் என பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் மெதுவாக இயங்குகிறது, ஆண்டு தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை, கணக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என தொடர்ச்சியாக கூறி வந்தனர் . ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்க வேண்டும் என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கையை முன் வைத்தனர் . duedateextension என்ற ஹேஷ்டேக்கும் சமூகவலைதளங்களில் டிரெண்டானது.

செப்டம்பர் 15க்குள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்கள் அதன் பிறகு அபராதத்தோடு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும் என்பதால் பலரும் வருமானவரித்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஒருநாள் அவகாசம் வழங்கியிருப்பதாக வருமானவரித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வழக்கமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதியுடன் தான் முடியும் ஆனால் இந்த முறை செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அதனை செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம் என தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டில் 7 கோடிக்கும் அதிகமானவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+