வருமான வரி தாக்கல்: டிசம்பர் 31-க்குள் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இரண்டு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் டிசம்பர் 27ஆம் தேதி வரையில் 4.67 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என அறிவித்துள்ளது.

தூள் கிளப்பிய ரிலையன்ஸ், டிசிஎஸ்.. 10ல் 5 நிறுவனம் ஏற்றம்.. !

2 நாள் மட்டுமே

2 நாள் மட்டுமே

இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பல மீண்டும் வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படும் என நம்பி வரும் நிலையில், வருமான வரித்துறை இதுவரை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வருமான வரி அறிக்கை

வருமான வரி அறிக்கை

இந்த சூழ்நிலையில் வருமான வரி அறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களின் நிலை என்ன. 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி, டிசம்பர் 31க்கு பின் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதா என்பது தான்.

மார்ச் 31, 2022 வரை
 

மார்ச் 31, 2022 வரை

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31, 2022 வரையில் தாக்கல் செய்யலாம், ஆனால் அதற்கு பல விஷயங்களை இழக்க நேரிடும். குறிப்பாக டிசம்பர் 31க்கு பின் வரி தாக்கல் செய்வோர் நடப்பு நிதியாண்டில் ஏதேனும் நஷ்டங்கள் இருந்தால் அதை கேரி பார்வோர்டு செய்ய முடியாது.

இழப்புகள்

இழப்புகள்

இதேபோல் வருமான வரி செலுத்துவோர் அதிகப்படியான வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி இருப்பின் டிசம்பர் 31-க்கு பின் திரும்ப பெற முடியும், ஆனால் அந்த தொகைக்கு மத்திய நிதியமைச்சகம் கொடுக்கும் வட்டியை இழக்க நேரிடும்.

அபராதம்

அபராதம்

அனைத்திற்கும் மேலாக டிசம்பர் 31க்கு பின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்தால் அதிகப்படியான தாமத கட்டணம் செலுத்த வேண்டும், உதாரணமாக உங்களின் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தின் அளவு 5,00,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் 5000 ரூபாயும், 5,00,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 1000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

 வருமான வரி சட்டம்

வருமான வரி சட்டம்

இதுவே 2022, மார்ச் 31ஆம் தேதிக்கு பின்பும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் செலுத்த வேண்டிய வருமான வரியில் 50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் வருமான வரி சட்டத்தின் படி வருமான வரி செலுத்தவர்களுக்கு 3 வருடம் முதல் 7 வருடம் வரையில் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ITR filing last date Dec 31: What will happen if failed to file ITR

ITR filing last date Dec 31: What happen if failed to file ITR வருமான வரி தாக்கல்: டிசம்பர் 31-க்குள் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X