2023-24 ஆம் கணக்கீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITRs) ஜூலை 31 காலக்கெடுவிற்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது. வழக்கம் போல் கடைசி நேரத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த முறை கால நீட்டிப்பு செய்ய எவ்விதமான அறிவிப்பும் இதுவரையில் அறிவிக்கவில்லை.
ஐடிஆர் இ-ஃபைலிங் போர்ட்டலில் ஏற்கனவே 5 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் தங்களுடைய ஐடிஆர் அறிக்கையை தாக்கல் செய்து, 4.46 கோடி பேர் ஈவெரிபிகேஷன்-ம் செய்து முடித்துள்ளனர். இந்த நிலையில் டிவிட்டரில் வருமான வரி அறிக்கை மற்றும் வருமான வரி தொடர்பான மீம் அனல் பறக்கிறது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து தணிக்கையாளர்களுக்கும் ஜூலை மாதம் இப்படி தான் இருக்கும் என சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கையெழித்திடும் வீடியோ-வை கட் செய்து வைரலாக்கியுள்ளனர்.

சமீபத்தில் சம்பளத்தில் பெரும் பகுதியை மக்கள் வரியாக செலுத்தி வருவது போன்ற கருத்துக்கள் சமுகவலைத்தளத்தில் அதிகரித்துள்ள நிலையில் வரிக்கு முன்பும், பின்பும் என மக்களுடைய வருமானம் எவ்வளவு குறைகிறது என்பதை சித்தரிக்கும் வகையில் ஒரு GIF என்று காலை முதல் டிரெண்டாகி வருகிறது.
ஐடிஆர் பைலிங் செய்யும் நேரத்தில் பலர் தனிக்கையாளர்கள் உதவியை நாடியிருப்பீர்கள், இந்த நிலையில் உங்களுடைய மனைவியே CA ஆக இருந்து, எவ்விதமான பணம் வாங்காமல் ஐடிஆர் பைலிங் முடித்தால் எப்படியிருக்கும். அதேநேரத்தில் வரி ரீபண்ட் பணத்தை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போனால் எப்படியிருக்கும் என்பதை மீம் மூலம் கலாய்த்துள்ளனர்.

ஜூலை 31 ஆம் தேதி வரையில் வருமான வரி தாக்கல் செய்யாமல் கடைசி நாளில் CA அலுவலகத்திற்கு வருபவர்களை கலாய்க்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளனர். இதேநேரத்தில் வருமான வரி தளம் முடங்கினால் எப்படியிருக்கும்..?

வருமான வரி ரீபண்ட் தொகையில் round off செய்யும் வழக்கம் உள்ளது. இது தெரியாத சாமானிய வருமான வரி செலுத்தும் நபர் ஒரு ஸ்கிரீன்ஷாட் பதிவிட்டு மொத்தமாக செலுத்திய வரி 4204 ரூபாய், செலுத்த வேண்டிய வரி 0 ரூபாய், ரீபண்ட் கிடைக்கும் வரி பணம் 4200 ரூபாய். இந்த 4 ரூபாய் எங்கே போகிறது என கேட்டுள்ளார். இதற்கு சிலர் PM CARE FUND-க்கு செல்கிறது என கூறுகையில் மற்றொருவர் sec 288A, 288B விதியை விளக்கியுள்ளார்.

இதேவேளையில் பலரும் கால நீட்டிப்பு குறித்தும் கேள்விகளை பதிவிட்டு உள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications