2023-24 ஆம் கணக்கீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITRs) ஜூலை 31 காலக்கெடுவிற்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனாலும் கடைசி நேரத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக தான் உள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி அதாவது இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பதை தான் இப்போது பார்க்கப்போகிறோம். இன்று தாக்கல் செய்யாவிட்டாலும் டிசம்பர் 31 வரையில் தாக்கல் செய்ய முடியும், ஆனால் அதற்கு பெரும் தொகையை நாம் இழக்க வேண்டியிருக்கும்.

ஜூலை 31 ஆம் தேதி இரவு 12 மணிக்குள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாவிடில் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரையில் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் தாக்கல் செய்யலாம். ஆனால் தாக்கல் செய்யும் இறுதிக்கட்டத்தில் தாமத கட்டணம் மற்றும் கூடுதல் வரி உடன் ITR அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.
5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 5000 ரூபாய் தாமத கட்டணம், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் கொண்டவர்களுக்கு 1000 ரூபாய் தாமத கட்டணம் விதிக்கப்படும். மத்திய வருமான வரித்துறை இதுவரையிலே ITR தாக்கல் செய்ய கால நீட்டிப்பு அறிவிக்கவில்லை.
மேலும் தாமத கட்டணத்துடன் நிலுவையில் இருக்கும் வருமான வரி-க்கு penal interest விதிக்கப்படும். வருமான வரி சட்டத்தின் நிலுவையில் இருக்கும் வருமான வரி தொகைக்கு மாதம் 1 சதவீத வட்டியை அபராதமாக செலுத்த வேண்டி வரும்.
2022-23 ஆம் ஆண்டில் 7.4 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்த நிலையில் அதில் 5.16 கோடி பேர் அல்லது 70 சதவீதம் பேர் பூஜ்ஜிய வரி அளவை கொண்டுள்ளனர். இதன் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டில் வெறும் 2.24 கோடி பேர் வருமான வரியை அரசுக்கு செலுத்தியுள்ளனர் இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1.6 சதவிகிதம் மட்டுமே.
இந்த 1.6 சதவீத மக்கள் செலுத்திய வருமான வரி தொகை நாட்டின் மொத்த நேரடி வரி வசூலில் சுமார் 27 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கூறுகிறது.
2023, ஜூலை 30 ஆம் தேதி வரையில் சுமார் 6 கோடி பேர் தங்களுடைய வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர், இதில் முக்கியமாக ஜூலை 30 ஆம் தேதி மாலை 6.30 மணி வரையிலான ஒரு நாளில் மட்டும் சுமார் 26.76 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 - 5 சதவீதம் வரையில் உயரும் வேளையில் இந்த வருடம் 7.6 கோடி என்ற அளவீட்டை தாண்டுமா..?
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications