2025- 26 ஆம் நிதியாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. நாடு முழுவதிலும் இருக்கும் வருமான வரி செலுத்தக்கூடிய தனிநபர்கள் பலரும் அடுத்ததாக தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதற்கான படிவங்கள், முதலீடுகள் உள்ளிட்டவற்றை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறார்கள்.
இந்திய வருமான வரி துறையை பொறுத்த வரை கூடிய விரைவில் 2025 -26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் படிவங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைனில்0 efiling நடைமுறை ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. பொதுவாக அரசு பிப்ரவரி மாதத்தில் இந்த படிவங்களை வெளியீடு செய்து ஆன்லைனில் நாம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான அனுமதி ஏப்ரல் மாதத்தில் இருந்து கிடைக்கும். இந்த ஆண்டும் அதே நடைமுறை பின் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான ஊதியதாரர்களுக்கு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் தான் அவர்களுடைய நிறுவனங்களிடமிருந்து படிவம் 16 கிடைக்கும். இந்த படிவம் 16 கிடைத்த உடன் தான் அவர்களால் தங்களுடைய வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். படிவம் 16 தான் அந்த ஊழியரின் மொத்த சம்பளம், அதில் பிடிக்கப்பட்ட டிடிஎஸ் எவ்வளவு என்பன உள்ளிட்ட அனைத்து முக்கியமான தகவல்களும் இடம்பெறும். பொதுவாக ஜூன் 15ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ தந்துவிட வேண்டும்.
எனவே ஏப்ரல் இறுதியில் இருந்து வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான அனுமதி இணையதளத்தில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. படிவம் 16 கிடைத்தவுடன் சம்பளதாரர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்துவிட வேண்டும். ஏனெனில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான இறுதி நாட்களில் வருமானவரித்துறை இணையதளம் பெரும்பாலும் முடங்கிவிடும் என்பதால் அந்த கடைசி நேர சிக்கலில் சென்று மாட்டிக் கொள்ளாமல் படிவம் 16 கிடைத்த உடனேயே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்து விடுவது நல்லது.
ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு நமக்கான ரீஃபண்ட் என்பது 7 முதல் 20 நாட்களுக்குள் வந்துவிடும். இதற்கு நாம் நம்முடைய வருமான வரி படிவத்தை சரியாக தேர்வு செய்து முறைப்படி வருமான வரி கணக்கினை தாக்கல் செய்திருக்க வேண்டும் . நம்முடைய பான் என்னுடன் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் அனைவரும் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்துவிட வேண்டும்.


Click it and Unblock the Notifications