வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 நெருங்கி வருகிறது. இன்னும் பலர் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருக்கும் வேளையில் பெரும் அபராதத்துடன் செலுத்துவதை தவிர்க்க ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்.
மேலும் வருமான வரி துறை மாத சம்பளக்காரர்கள் செய்யும் வரி ஏய்ப்பை தடுக்கும் பொருட்டு போலியான வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தி வரி செலுத்துபவர்களை கண்டறிய வருமான வரித்துறை தனிப்பட்ட முயற்சிகளை துவங்கியுள்ளது.

தனிநபர்கள் போலியான வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தி போலியான அல்லது தவறான வருமான வரி கணக்குகள் (ITRs) சமர்ப்பிக்கப்படுவதை சமீப காலமாக அதிகளவில் வருமான வரித்துறை கண்டுப்பிடித்து வரும் வேளையில் தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருமான வரித்துறை இந்த ஆண்டு முதல் போலி வாடகை ரசீது சமர்ப்பிப்பதில் இருந்து போலியான நன்கொடைகள் வரையில் தனிநபர் ஏமாற்றும் பல விஷயங்களை தீவிரமாக கண்காணித்து நோட்டீஸ் கொடுத்து வருகிறது.
மாத சம்பளக்காரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களின் பான் எண் இல்லாமல் வருடத்திற்கு கிட்டதட்ட 1 லட்சம் வரையிலான வீட்டு வாடகைக்கு வரி விலக்குகளைப் பெற அனுமதிக்கப்படுகிறது. சில தனிநபர்கள் இந்த விதியை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

இதன் மூலம் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய நபரின் வரி விலக்குகளை சரிபார்க்க ஆதாரம் கேட்டு வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுபுவதை அதிகரித்து வருகிறது என்று Tax2win இன் CEO மற்றும் இணை நிறுவனர் அபிஷேக் சோனி கூறினார். இந்த பிரச்சனைகளை தவிர்க்க இனி செக் அல்லது ஆன்லைன் வழியாக வீட்டு வாடகை செலுத்துவதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
மேலும் வருமான வரி அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதை வருமான வரித்துறை கண்டறியப்பட்டால், வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பலாம். இதேபோல் வருமானம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், தவறாகப் புகாரளிக்கப்பட்ட வருமானத்திற்கு 200% வரை அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.


Click it and Unblock the Notifications